சார்லி சாப்ளின் மாறுவேடப் போட்டியில் தோல்வி அடைந்தாரா ?| ஆதாரம் உள்ளதா ?

பரவிய செய்தி

அமெரிக்காவில் சார்லி சாப்ளின் மாறுவேடப் போட்டி நடைபெற்றதாம். உண்மையான சார்லி சாப்ளினே கலந்து கொண்டாராம். ஆனால், மூன்றாம் பரிசுதான் கொடுத்தார்களாம்.

மதிப்பீடு

விளக்கம்

மக்களை எளிதாக சிரிக்க வைக்கத் தூண்டும் தோற்றம் அது. குட்டி மீசையுடன் சார்லி சாப்ளின் செய்யும் வேடிக்கையான செயல்களால் இன்றும் உலகம் முழுவதும் மக்களின் நினைவுகளால் வாழ்ந்து வருகிறார்.

Advertisement

உலகப் புகழ்பெற்ற சார்லி சாப்ளின் கூட தன்னை போல் வேடமிட்டு நடித்து காண்பிக்கும் மாறுவேடப் போட்டியில் தோல்வி அடைந்து உள்ளதாகவும், அவருக்கு மூன்றாம் பரிசு தான் கிடைத்தது என்றும் கூறப்படும் தகவல் பல ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது.

சார்லி சாப்ளின் தன்னுடைய வேடத்தியேயே தோல்வியை சந்தித்து உள்ளார் என்றால், அவரை போல் நடித்து காட்டியவர்கள் பாராட்டப்படக்குரியவர்கள் என்று கூறப்படும் பதிவுகளை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். இந்நிலையில், மீண்டும் சார்லி சாப்ளின் மாறுவேடப் போட்டியில் தோல்வி அடைந்தது குறித்து மீம் பதிவுகள் வைரலாகி வருகின்றனர். ஆகையால், அதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்த்தோம்.

உலகம் முழுவதும் பரவிய செய்தி :

பல ஆங்கில இணையதளங்களில் ” Did Charlie Chaplin lose a Charlie Chaplin look-alike contest? ” என்ற தலைப்பில் சார்லி சாப்ளின் மாறுவேடப் போட்டியில் தோல்வி அடைந்து இருந்தாரா என ஆராய்ந்து பார்த்து வெளியிட்ட கட்டுரைகள் உள்ளன.

1920 காலக்கட்டத்தில் உலகின் பல நாடுகளில் உள்ள செய்தித்தாள்களில் சார்லி சாப்ளின் மாறுவேடப் போட்டியில் தோல்வி அடைந்து உள்ளதாக கூறப்படும் தகவல்கள் வெளியாகி இருக்கும் பக்கங்கள் சில இணையதளங்களில் இருந்து நமக்கு கிடைத்தது.

Advertisement

அதில், 1920 ஜூலை 1-ம் தேதி Sheffield Evening Telegraph என்ற செய்தித்தாளின் ” To-day’s Gossip ” என்ற பிரிவில் சார்லி சாப்ளின் மாறுவேடப் போட்டியில் கலந்து கொண்டு தோல்வி அடைந்து உள்ளதாக குறிப்பிட்டு உள்ளனர்.

இதேபோன்று, 1920-ல் சிங்கப்பூரைச் சேர்ந்த ” The Straits Times ” என்ற செய்தித்தாளில் “How Charlie Chaplin Failed ” எனும் தலைப்பில் வெளியாகி உள்ளது.

அடுத்ததாக, நியூசிலாந்து நாட்டின் “ Poverty Bay Herald ” என்ற செய்தித்தாளிலும் வெளியாகி இருக்கிறது. இப்படி பல செய்தித்தாள்களில் வெளியாகிய தகவல் கிடைத்தது.

குறிப்பிட்டு பார்க்க வேண்டியவை :

இப்படி வெளியான செய்தித்தாள்களில் சார்லி சாப்ளின் மாறுவேடப் போட்டியில் பங்கேற்றது குறித்து Lord Desborough என்பவர் Anglo-Saxon என்ற விடுதியில் இரவு உணவு விருந்தின் பொழுது கூறியதாக வெளியாகி இருக்கிறது. மேலும், இந்த தகவல் Mary Pickford’s என்பரிடம் இருந்து வந்ததாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Mary Pickford’s என்பவர் சார்லி சாப்ளின் உடைய தோழி ஆவார். இந்த தகவலை Mary Pickford’s கூறியதாக கூறி உலகம் முழுவதும் செய்தித்தாள்களில் வெளியாகி இருக்கிறது. ஆனால், பிரிட்டிஷ் செய்தித்தாளான Sheffield Evening Telegraph-ல் Mary Pickford’s குறித்து இடம்பெறவில்லை.

குறிப்பாக, சார்லி சாப்ளின் குறித்த செய்தியில் அவருக்கு 20-வது இடங்கள் கிடைத்ததாக குறிப்பிட்டு உள்ளனர். ஆனால், தமிழில் மற்றும் பிற மொழி பதிவுகளில் 3-ம் இடம் கிடைத்ததாக குறிப்பிட்டு வருகின்றனர்.

மேலும், சார்லி சாப்ளின் மாறுவேடப் போட்டி அமெரிக்காவில் எங்கு எப்பொழுது நடைபெற்றது என்பது குறித்தோ அல்லது நிகழ்ச்சி குறித்த நேரடி தகவல்களே அல்லது புகைப்படங்களோ இல்லை. வாய்வழியாக ஒருவர் கூற மற்றொருவரிடம் பரவி செய்தியாகி உள்ளது.

இத்தனை முரண் இருக்க, சார்லி சாப்ளின் மகன் எழுதிய ” My Father , Charlie Chaplin ” என்ற புத்தகத்தில் மாறுவேடப் போட்டி குறித்து எங்கும் குறிப்பிடவில்லை என அப்புத்தகத்தை வாசித்தவர் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும், Lord Desborough என்ற பெயரை தவிர சார்லி சாப்ளின் கதைக்கு எந்தவொரு நேரடி ஆதாரமும் இல்லை. இக்கதை 1920-களில் உலகம் முழுவதும் பரவி இருக்கிறது.

முடிவு :

நம்முடைய தேடலில் இருந்து, சார்லி சாப்ளின் மாறுவேடப் போட்டியில் தோல்வி அடைந்து, மூன்றாம் பரிசை பெற்றதாக தற்பொழுது கூறுகின்றனர். ஆனால், 1920-களில் வெளியான செய்திகளில் 20-வது இடம் கிடைத்ததாக கூறப்பட்டுள்ளது.

அடுத்ததாக, லண்டனைச் சேர்ந்த Lord Desborough என்பவர் இரவு உணவு விருந்தியில் சார்லின் சாப்ளின் கதையை கூறியதாகவும், அவருக்கு சார்லி சாப்ளின் உடைய தோழி Mary Pickford’s கூறியதாக குறிப்பிட்டு இருக்கின்றனர்.

இதைத் தவிர்த்து, சார்லி சாப்ளின் அமெரிக்காவில் மாறுவேடப் போட்டியில் கலந்து கொண்டது குறித்து நேரடி ஆதாரங்களோ, புகைப்படங்களோ, பத்திரிகை செய்தியோ இல்லை. வாய்வழியாக வந்த கதை மட்டுமே உள்ளது. அது கட்டுக்கதையாகவும் இருக்கக்கூடும்.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button