சென்னை மின் மயானத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமா ?

பரவிய செய்தி

மதிப்பீடு
விளக்கம்
தமிழகத்தில் கடந்த வாரங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருப்பதால் மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள், ஆக்சிஜன்கள் கிடைக்கவில்லை என்கிற குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் உள்ள மின் மயானத்தில் நீண்ட வரிசையில் இறந்தவர்களின் உடல்களை வைத்து காத்துக்கொண்டு இருப்பதாக இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” 2021 ஏப்ரல் 21-ம் தேதி outlook இணையதளம் வெளியிட்ட புகைப்படத் தொகுப்பில் 69-வது புகைப்படமாக இடம்பெற்று இருக்கிறது.
புகைப்படத்திற்கு கீழே, உத்தரப் பிரதேச மாநிலத்தின் காசியாபாத் பகுதியில் உள்ள ஹிந்தோன் நதி மயானத்தில் இறந்தவர்களின் உடல்கள் வரிசையாக காத்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
இதேபோல், ஏப்ரல் 18-ம் தேதி ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியில் ஹிந்தோன் மயானத்தில் எடுக்கப்பட்ட மற்றொரு புகைப்படம் வெளியாகி இருக்கிறது. இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கலாம்.
மே 8-ம் தேதி வெளியான தந்தி டிவி செய்தியில், சென்னை வில்லிவாக்கம் மயானத்தில் அதிகளவில் உடல்கள் வந்ததால் உறவினர்கள் 2 மணி நேரம் காத்திருந்ததாக வெளியாகி இருக்கிறது.
இதேபோல், மே 11-ம் தேதி வெளியான புதியதலைமுறை செய்தியில், சென்னை மயானத்தில் உடல்களை தகனம் செய்ய 3 மணி நேரம் காத்திருப்பதாக வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், சென்னை மாநகராட்சியின் மின் மயானத்தில் இறந்தவர்களின் உடல்கள் வரிசையாக காத்திருப்பதாக பரப்பப்படும் புகைப்படம் கடந்த மாதம் உத்தரப் பிரதேச மாநிலத்தின் காசியாபாத் மயானத்தில் எடுக்கப்பட்டது என அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.