கிண்டல் செய்வதாக நினைத்து பழையச் செய்தியைப் பகிர்ந்த சுமந்த் ராமன் !

பரவிய செய்தி
ஐயா இது சனாதன சக்திகளால் தமிழர்களை அவமதிக்கும் செயல். ஒன்றிய அரசின் பாரபட்சமான போக்கை கண்டிக்க வேண்டும். இல்லையா ??? (கிண்டல் எச்சரிக்கை). சுத்தமான ரயில் நிலையங்களில் 7 ராஜஸ்தானில், அசுத்தமான ரயில் நிலையங்களில் 6 சென்னையில் உள்ளது.
மதிப்பீடு
விளக்கம்
நாட்டிலேயே சுத்தமான ரயில் நிலையங்களில் 7 ராஜஸ்தானில் இருப்பதாகவும், அசுத்தமான ரயில் நிலையங்களில் 6 சென்னையில் இருப்பதாகவும் பாலிமர் செய்தியில் வெளியான வீடியோ ஒன்றை RVAIDYA2000 எனும் ட்விட்டர் பக்கம் பதிவிட்டது.
Top ten clean Stations 7 from Rajasthan//top ten dirty stations 6 from TN Super Besh:))) RT pic.twitter.com/VxWiWv1qCa
— RVAIDYA2000 🕉️ (@rvaidya2000) March 16, 2022
அதைப் பகிர்ந்த அரசியல் விமர்சகர் சுமந்த் ராமன், ” ஐயா இது சனாதன சக்திகளால் தமிழர்களை அவமதிக்கும் செயல். ஒன்றிய அரசின் பாரபட்சமான போக்கை கண்டிக்க வேண்டும். இல்லையா ??? (கிண்டல் எச்சரிக்கை) ” என கிண்டல் செய்யும் விதத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
உண்மை என்ன ?
This news clipping is a old one, based on a 2019 survey report. Over the last few years, Chennai division has taken several measures to improve the cleanliness at Guindy, Guduvancheri, Perungalathur and Velachery. Besides, penalties are being imposed for littering. @GMSRailway
— DRM Chennai (@DrmChennai) March 17, 2022
நாட்டில் உள்ள 10 அசுத்தமான ரயில் நிலையங்களில் 6 தமிழ்நாட்டில் இருப்பதாக RVAIDYA2000 ட்விட்டரில் பகிர்ந்த வீடியோ பதிவிற்கு தெற்கு ரயில்வேயின் சென்னை பிராந்திய ரயில்வே மேலாளர் DRM chennai ட்விட்டர் பக்கம், ” இது 2019 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு அடிப்டையில் வெளியான பழைய செய்தி. கடந்த சில ஆண்டுகளாக கிண்டி, கூடுவாஞ்சேரி, பெருங்களத்தூர் மற்றும் வேளச்சேரியில் தூய்மை பணியை மேம்படுத்த சென்னை கோட்டம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், குப்பைகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படுகிறது ” என பதில் அளித்து உள்ளனர்.
அசுத்தமான ரயில் நிலையங்கள் செய்தி குறித்து பாலிமர் சேனலில் தேடுகையில், ” 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இவ்வீடியோவை பாலிமர் செய்தி வெளியிட்டு இருக்கிறது.
மேலும் படிக்க : எம்.பி கனிமொழி கூறிய உண்மையான தகவலை பொய் என்ற பாஜகவின் சூர்யா !
சமீபத்தில், தெற்கு ரயில்வேயின் புதிய வழித்தடங்களுக்கு ரூ.59 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், வடக்கு ரயில்வேயின் புதிய வழித்தடங்களுக்கு ரூ.13,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது என மக்களவையில் எம்.பி கனிமொழி பேசியது பொய் என தவறான தகவல்களை பாஜகவினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர். இதையடுத்து, சென்னை ரயில் நிலையங்களின் நிலை என பழைய வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள்.
முடிவு :
நம் தேடலில், நாட்டில் உள்ள அசுத்தமான 10 ரயில் நிலையங்களில் 6 தமிழ்நாட்டில் இருப்பதாக பரவும் செய்தி வீடியோ கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பாக வெளியான செய்தி என அறிய முடிகிறது.