சென்னையில் இருந்து புறப்பட்ட இரயில் இஞ்சினில் தீ விபத்து ஏற்பட்டதாகத் தவறான செய்தி வெளியிட்ட ஊடகங்கள் !

பரவிய செய்தி
சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ விபத்து – பயணிகள் அலறி அடித்து ஓட்டம்.
மதிப்பீடு
விளக்கம்
ஒடிசா ரயில் விபத்தைத் தொடர்ந்து சென்னையில் இரயில் தடம் புரண்ட சம்பவங்களும் நடந்தன. அதிர்ஷ்டவசமாக அச்சம்பவத்தில் உயிர்ச் சேதம் ஏதும் நிகழவில்லை.
இந்நிலையில் நேற்றைய தினம் (ஜூன், 22ம் தேதி) சென்னையில் இருந்து மும்பை நோக்கிப் புறப்பட்ட லோக்மான்ய திலக் விரைவு இரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாகச் செய்திகள் வெளியாகின.
Watch | சென்னையில் இருந்து மும்பை நோக்கி புறப்பட்ட லோக்மான்ய திலக் விரைவு ரயில் இஞ்சினின் பின்புறம் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு!
பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே தீ விபத்து ஏற்பட்டதை பார்த்த பயணிகள் பதறியடித்து வெளியேறினர்!#SunNews | #TrainFireAccident pic.twitter.com/rtbR1Gs9zE
— Sun News (@sunnewstamil) June 22, 2023
#BREAKING சென்னையிலிருந்து மும்பை நோக்கி சென்ற லோக்மான்ய திலக் ரயிலின் ஏசி பெட்டியில் தீ விபத்து#Chennai #TrainFireaccident #News18TamilNadu https://t.co/7dpn9FD15R pic.twitter.com/UDcSpysz2j
— News18 Tamil Nadu (@News18TamilNadu) June 22, 2023
‘தந்தி டிவி’ செய்தியில் இரயில் இஞ்சினில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், ‘நியூஸ் 18 தமிழ்நாடு’ செய்தியில் ஏசி பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் சில செய்திகளில் உயர் அழுத்த மின் கம்பியில் ஏற்பட்ட உரசலே தீ விபத்துக்கு காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.
உண்மை என்ன ?
சென்னையில் இருந்து மும்பை புறப்பட்ட லோக்மான்ய திலக் விரைவு இரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக ஊடகங்கள் வெளியான செய்திகள் வெவ்வேறு மாதிரி இருந்ததைத் தொடர்ந்து இது குறித்து இணையத்தில் தேடினோம்.
லோக்மான்ய திலக் இரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக வெளியான செய்திகளுக்குக் கீழே தெற்கு இரயில்வேயின் அதிகாரப் பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இருந்து பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “இதன் மூலம் தீ விபத்து ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. HOG கப்ளரில் ஏற்பட்ட பிரச்சனையால் புகை வெளியேறியுள்ளது. மேலும், புகை நிறுத்தப்பட்டது. அதன்பிறகு ரயில் தனது பயணத்தைத் தொடர்ந்தது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் தீ விபத்து ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. HOG கப்ளரில் ஏற்பட்ட பிரச்சனையால் புகை வெளியேறியுள்ளது. மேலும், புகை நிறுத்தப்பட்டது. அதன்பிறகு ரயில் தனது பயணத்தைத் தொடர்ந்தது.
— Southern Railway (@GMSRailway) June 22, 2023
இதே போல் ‘DRM Chennai’ டிவிட்டர் பக்கத்தில் ‘DT Next’ செய்தியைக் குறிப்பிட்டு “இது தவறான தகவல். உண்மையில் அது கோச் லைட் மற்றும் ஏர் கண்டிஷனிங் லோகோமோட்டிவ் சுமைகளுக்கான கப்ளரில் இருந்து வந்த புகை. இணைப்புகள் அகற்றப்பட்டு, இரயில் மீண்டும் இயக்கப்பட்டது. சரியான தகவல்களைச் சேகரித்த பிறகு பதிவிடவும்” எனக் கூறியுள்ளனர்.
This is misleading information. Actually it was smoke from coupler carrying power for coach light and air conditioning loads from the locomotive. Couplers have been removed and the train has left for the destination. Please post after gathering correct information. pic.twitter.com/FkIsXCPVqq
— DRM Chennai (@DrmChennai) June 22, 2023
இவற்றில் இருந்து இரயில் இஞ்சினிலோ, உயர் மின் கம்பி உராய்வினாலோ தீ விபத்து ஏற்படவில்லை என்பதும், அது கப்லரில் ஏற்பட்ட பிரச்சனையால் வெளியான புகை என்றும், அதனை சரி செய்து இரயிலும் இயக்கப்பட்டுள்ளது என்பதையும் அறிய முடிகிறது.
மேலும் படிக்க : ஒடிசா இரயில் விபத்து : ஜூனியர் என்ஜினியர் அமீர்கான் தலைமறைவு எனத் தவறான செய்தியை வெளியிட்ட ஊடகங்கள் !
இதற்கு முன்னர் ஒடிசா இரயில் விபத்தில் தொடர்பான விசாரணையில் ஜூனியர் என்ஜினியர் அமீர்கான் என்பவர் தலைமறைவு என ஊடகங்கள் தவறான செய்தி வெளியிட்டிருந்தன. அதன் உண்மைத் தன்மை குறித்தும் செய்தி வெளியிட்டுள்ளோம்.
முடிவு :
நம் தேடலில், லோக்மான்ய திலக் விரைவு இரயில் இஞ்சனில் தீ விபத்து ஏற்பட்டது, ஏசி பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது என வெளியான செய்திகள் உண்மை அல்ல. கப்லரில் ஏற்பட்ட பிரச்சனையால் புகை வெளியேறியதாக தெற்கு இரயில்வே விளக்கம் அளித்துள்ளது.