செர்னோபில் அணு உலை விபத்தால் பிறக்கும் குழந்தைகளின் நிலை !

பரவிய செய்தி

செர்னோபில் அணு உலை விபத்து ஏற்பட்டது 1887-ல், ஆண்டாண்டு காலம் ஆனாலும் அணு கதிர்வீச்சு அதன் தாக்கத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும். 110 ஆண்டுகள் ஆன பிறகும் பிறக்கும் குழந்தைகளின் புகைப்படங்கள்.

மதிப்பீடு

சுருக்கம்

1986-ம் ஆண்டில் செர்னோபில் அணு உலை விபத்து நிகழ்ந்தது, அங்கு குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளுக்கும், 33 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த விபத்திற்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

விளக்கம்

அணு உலை என்றாலே அச்சமடையும் நிலத்தில் அணு உலைகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் அணு உலை நிலையங்கள் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும் நிலையில் அணு உலை விபத்து குறித்த செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் மீம் வடிவில் பரவி வருகிறது.

Advertisement

செர்னோபில் அணு உலை விபத்து :

முந்தைய சோவியத் யூனியன் ஆட்சிக்கு உட்பட்ட உக்ரைன் பகுதியில் இருக்கும் செர்னோபில் அணு உலை நிலையத்தின் நான்காவது உலை 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 26-ம் தேதி வெடித்தது. அணு உலை வெடித்ததால் கதிரியக்க பொருட்கள்(Radioactive Materials) வேகமாக காற்றில் பரவத் துவங்கியது. காற்றில் பரவிய கதிரியக்க பொருட்கள் அதிக அளவில் பெலாரஸ், ரஷ்ய யூனியன் மற்றும் உக்ரைன் பகுதியில் பரவியதாகக் கூறப்படுகிறது.

அணு உலை வெடித்த விபத்தால் 31 பேர் உயிரிழந்தனர், எண்ணற்ற மக்கள் கதிர்வீச்சால் நீண்ட காலத்திற்கு பாதிக்கப்பட்டு இருந்தனர். அணு உலையில் இருந்து 19 மைல்கள் சுற்றி இருந்த பகுதியில் வசித்து வந்த 3,50,000 மக்கள் அவர்களின் வசிப்பிடத்தில் இருந்து வலுக்கட்டாயமாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.

1986-87 வரையிலான காலக்கட்டத்தில் ராணுவ ஆட்கள், அணு உலை அதிகாரிகள், உள்ளூர் காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் துப்புறவு பணியாளர்கள் என தோராயமாக 3,50,000க்கும் மேற்பட்டவர்களைக் கொண்டு கதிரியக்க குப்பைகளை சுத்தம் செய்துள்ளனர்.

Advertisement

பாதிப்பு :

2003 முதல் 2005 வரையில் நிபுணர்கள் அடங்கிய தொடர்ச்சியான சந்திப்புகளை உலக சுகாதார அமைப்பு(WHO) நடத்தி விபத்து தொடர்பாக ஏற்படும் உடல்நலம் சார்ந்த விளைவுகள் குறித்து அறிவியல் ஆதாரங்களை மதிப்பாய்வு செய்தது. விபத்தால் பாதிக்கப்பட்ட மூன்று நாட்டின் பகுதிகளிலும் சுகாதார முகாம்கள் அமைத்து மக்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர்.

செர்னோபில் அணு உலை விபத்து நிகழ்ந்து 30 ஆண்டுகள் கடந்தும் அங்கு பிறக்கும் குழந்தைகள் குறைபாடுகளுடன் பிறப்பதற்கு விபத்து காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. பெலாரஸ் நாட்டில் 20% குழந்தைகள் பிறக்கும் மொழுதே குறைபாடுகளுடன் பிறப்பதாக யுனிசெஃப் ஆய்வு தெரிவிக்கின்றது. 30 ஆண்டுகள் கடந்தும் கதிரியக்க தாக்கத்தின் விளைவு இருந்து வருகிறது.

முடிவு :

மீம் பதிவில் செர்னோபில் அணு உலை விபத்து 1887 ஆம் ஆண்டு நிகழ்ந்ததாக கூறப்பட்டு உள்ளது. அது தவறாகும். விபத்து நிகழ்ந்து 30 ஆண்டுகளை கடந்து உள்ளது என்பதே உண்மை. செய்தி உடன் பகிரப்பட்ட புகைப்படங்கள் பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த குழந்தைகள் என பிசினஸ் இன்சைடர் இந்தியா தளத்தில் 2006-ல் வெளியாகி உள்ளது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button