This article is from Jun 08, 2021

கோழி, ஆட்டு இறைச்சி மூலம் கருப்பு பூஞ்சை பரவுவதாக விஷமப் பதிவு !

பரவிய செய்தி

கருப்பு பூஞ்சை நோய் பிராய்லர் கோழி மூலம் பரவுவதால் குறைவு விலையில் விற்றாலும் வாங்காதீர்கள் மக்களே மருத்துவர் ஆலோசனை.

ஆட்டுக்கறி சாப்பிட்டால் கருப்பு பூஞ்சை நோய் மிக விரைவாக தாக்கக்கூடும் மருத்துவர்கள் புதிய கண்டுபிடிப்பு.

மதிப்பீடு

விளக்கம்

இந்தியாவில் கோவிட்-19 தொற்றின் இரண்டாம் அலையில் கருப்பு பூஞ்சை பாதிப்பு குறிப்பிடத்தக்க மக்களை தாக்கி உயிரிழப்பும் நிகழ்ந்ததால் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கோழி மற்றும் ஆட்டு இறைச்சி மூலமாகவும் கருப்பு பூஞ்சை அதிகம் பரவுவதை மருத்துவர்கள் தெரிவித்து வருவதாக சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க : தமிழகத்தை நெருங்கிய கருப்பு பூஞ்சை.. மருந்து தட்டுப்பாட்டை சமாளிக்குமா தமிழக அரசு ?

கருப்பு பூஞ்சை பாதிப்பானது கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களுக்கு அதிக அளவில் ஏற்படுவதாக கூறப்பட்டது. ஆனால், கருப்பு பூஞ்சை பாதிப்பு இறைச்சி, வெங்காயம் போன்றவற்றாலும் ஏற்படுவதாக சமூக வலைதளங்களில் கட்டுக்கதைகள் உருவாக்கப்படுகின்றன. இறைச்சி மூலம் கருப்பு பூஞ்சை பரவுவதாக எந்த தகவல்களும் இல்லை.

Twitter link 

இந்திய அரசின் அதிகாரப்பூர்வ PIB ட்விட்டர் பக்கத்தில், ” பண்ணை கோழிகளின் மூலமாக மனிதர்களுக்கு கருப்பு பூஞ்சை பரவுவதாக எந்தவொரு அறிவியல்ரீதியான ஆதாரங்களும் இல்லை ” எனப் பதிவிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : மதுரையில் கொரோனாவா ?| எண்ணெய் பலகாரம், கோழியால் கொரோனா பரவுகிறதா?

கடந்த ஆண்டில், கோவிட்-19 பரவத் துவங்கிய போது கோழி, ஆட்டுக்கறி சாப்பிட்டால் கொரோனா வருவதாக வதந்தியை பரப்பி இருந்தனர்.

இதுபோன்ற பதிவுகள் நையாண்டிக்காக உருவாக்கப்பட்டு இருந்தாலும் கூட பெருவாரியான மக்கள் உண்மை என நினைத்து வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பி தேவையற்ற பதற்றத்தை உருவாக்கி விடுகிறார்கள்.

முடிவு :

நம் தேடலில், பிராய்லர் கோழி மற்றும் ஆட்டு இறைச்சியால் கருப்பு பூஞ்சை வருவதாக பரப்பப்படும் தகவல் வதந்தியே. இதற்கு முன்பாக கோழிக்கறி, ஆட்டிறைச்சி மூலம் கொரோனா பரவுவதாக வதந்தியை பரப்பி விட்டனர் என்பதையும் அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader