18 நாட்களுக்கு பிறகு கொரோனாவை வென்று திரும்பிய குழந்தை !

பரவிய செய்தி
18 நாட்கள் குடும்பத்தினர் இல்லாமல் தனிமைப்படுத்துதல் மையத்தில் இருந்த குழந்தை கொரோனாவை வென்றுள்ளார்.
மதிப்பீடு
விளக்கம்
குழந்தை ஒன்று கொரோனா சிகிச்சை மையத்தில் 18 நாட்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார் என்கிற வாசகத்துடன் இக்குழந்தையின் புகைப்படம் இந்திய அளவில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Now that’s a GOOD morning…..🙏🏻 pic.twitter.com/eIMGv0eTMi
— Dev (@idevadhikari) June 10, 2020
இந்திய அளவில் வைரலாகி வரும் கொரோனா வார்டில் சிகிச்சைப் பெற்று வீட்டிற்கு திரும்பும் குழந்தையின் விவரங்களை அறிந்து கொள்ள தீர்மானித்து ஆராய்ந்து பார்த்தோம்.
She got discharged today !! pic.twitter.com/CmBfQUr8CP
— DM Siddharthnagar (@dmsid1) June 2, 2020
குழந்தையின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், உத்தரப் மாநிலத்தின் சித்தார்த்நகர் மாவட்ட மஜிஸ்திரேட் ட்விட்டர் பக்கத்தில் மே 22-ம் தேதி அக்குழந்தைக்கு பொம்மை வழங்கப்படும் புகைப்படத்தையும், ஜூன் 2-ம் தேதி அக்குழந்தை வீடு திரும்பியதாக வைரலாகும் புகைப்படத்தை பதிவிடப்பட்டுள்ளது.
24ghanteonline எனும் இணையதளத்தில் வெளியான தகவலில், ” மே 13-ம் தேதி மும்பையில் இருந்து சித்தார்த்நகர் மாவட்டத்தின் பர்த்பூர் பகுதிக்கு திரும்பிய தம்பதியின் 2 வயது குழந்தைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட பிறகு அப்பாவி குழந்தையை தனிமைப்படுத்துவது மருத்துவர்களுக்கு சிக்கலாக இருந்துள்ளது. குழந்தை எப்படி தனியாக இருக்கும்.
” நீண்டநேர கலந்துரையாடிய பின்னர், சிறுமியை தனது தாயுடன் பர்த்பூரின் சமூக சுகாதார மையத்தில் உள்ள எல்-1 மருத்துவப் பிரிவில் தனிமைப்படுத்தி கவனித்து உள்ளனர் “.
மருத்துவர்கள் குழு தொடர்ந்து கவனித்து வந்த பிறகு இக்குழந்தை ஆரோக்கியத்துடன் இன்று வீடு திரும்பி உள்ளார். இந்த குழந்தை மருத்துவக் கண்காணிப்பாளர் சுபோத் சந்திராவின் தலைமையில் தனிமைப்படுத்தப்பட்டார். 2 வயது குழந்தை கொரோனாவை தோற்கடித்து வீட்டிற்கு செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது என மருத்துவர் தெரிவித்தார் ” என வெளியாகி இருக்கிறது.
நமக்கு கிடைத்த தகவலில், உத்தரப் பிரதேசத்தின் சித்தார்த்நகர் மாவட்டத்தில் உள்ள பர்த்பூர் பகுதியில் கொரோனா உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் அளிக்கப்பட்ட 2 வயது குழந்தை மீண்டு வீட்டிற்கு செல்லும் புகைப்படமே இந்திய அளவில் வைரலாகி உள்ளது. தனிமைப்படுத்துதல் மையத்தில் குழந்தையுடன் தாய் இருந்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.