குழந்தைகளை பாஜக மிரட்டுவதை இபிஎஸ் கண்டித்ததாகப் போலிச் செய்தி !

பரவிய செய்தி

எல்.கே.ஜி குழந்தைகளை மிரட்டும் செயலை அதிமுக மிகவும் வன்மையாக கண்டிகிறது. அண்ணாமலை போன்றவர்கள், இதுபோன்ற நிகழ்ச்சிகளை சாதாரணமாக கடந்து செல்ல வேண்டும்- எடப்பாடி பழனிசாமி.

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் குழந்தைகள் பிரதமர் மோடியை நையாண்டி செய்த காட்சி இடம்பெற்றதாக பாஜகவினர் தரப்பில் கண்டனம் எழுந்தது.

இந்த விவகாரத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதற்கு எதிராக கண்டித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கருத்துக் கூறியதாக தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்று பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?  

வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டு குறித்து தந்தி டிவி சேனலின் முகநூல் பக்கத்தில் தேடுகையில், குழந்தைகளின் ரியாலிட்டி நிகழ்ச்சி தொடர்பாக பாஜகவின் கண்டனத்திற்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்ததாக எந்த செய்தியும் வெளியாகவில்லை.

Facebook link 

பரப்பப்படும் நியூஸ் கார்டை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2022 ஜனவரி 11-ம் தேதி ” பொங்கல் தொகுப்பில் 21 பொருட்கள் முழுமையாக வழங்கப்படுவதில்லை – எடப்பாடி பழனிசாமி ” என்ற நியூஸ் கார்டு வெளியாகி இருப்பது கிடைத்தது. அதில், போலியான செய்தியை எடிட் செய்துள்ளனர்.

மேலும் படிக்க : குழந்தைகளின் ரியாலிட்டி ஷோ விவகாரத்தில் அண்ணாமலை பற்றிப் பரவும் போலிச் செய்திகள் !

முடிவு : 

நம் தேடலில், எல்.கே.ஜி குழந்தைகளை மிரட்டும் செயலை அதிமுக மிகவும் வன்மையாக கண்டிகிறது. அண்ணாமலை போன்றவர்கள், இதுபோன்ற நிகழ்ச்சிகளை சாதாரணமாக கடந்து செல்ல வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரப்பப்படும் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.

Please complete the required fields.
Back to top button
loader