செயற்கை நிலாவை உருவாக்கும் சீனா..!

பரவிய செய்தி

செயற்கை நிலவை உருவாக்கும் சீன தேசம். நிலவை விட அதிக ஒளியை தரக் கூடிய செயற்கை நிலாக்களை சீனா தயாரித்து வருகிறது.

மதிப்பீடு

சுருக்கம்

“ Illuminating satellite “ என்னும் செயற்கை நிலவை சீனாவின் செங்க்டு நகரில் 2020-ல் முதற்கட்டமாக சோதனை செய்து பார்க்க உள்ளதாக சீன ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு உள்ளன. சீனாவின் செயற்கை நிலாக்கள் வானில் உள்ள நிலாவை விட 8 மடங்கு அதிக ஒளியை  நகரில் அளிக்கும் என கூறியுள்ளனர்.

விளக்கம்

அறிவியல் கண்டுபிடிப்பு, தொழில் வளர்ச்சி உள்ளிட்ட பல விசயங்களில் உலக நாடுகளுக்குள் போட்டி என்றுமே இருந்து கொண்டுதான் இருக்கின்றன. புதுமையான கண்டுபிடிப்புகள் நவீன உலகை கட்டமைக்கின்றது. நவீன உலகின் தேவையை சமாளிக்க புதிய கண்டுபிடிப்புகள் கட்டாயமாகி விட்டது. அதேபோன்ற ஒரு கண்டுபிடிப்பை சீனா முயற்சி வருகிறது.

Advertisement

செயற்கை நிலா : 

பகலில் சூரியனின் ஒளியால் பூமி முழுவதும் ஒளி வீசுகிறது. இரவில் நிலவால் வெளிச்சம் காண்கிறது. அந்த நிலவையே செயற்கையாக உருவாக்கினால் இரவில் இருள் என்பதே இல்லாமல் போய்விடும் என்பது சீன அறிவியலாளர்கள் எண்ணம்.

சீனா விண்வெளி தொழில்துறை உலகின் முதல் செயற்கை நிலவை உருவாக்கி நகர்ப்புறங்களில் ஒளிரச் செய்வதன் மூலம் மின்சார செலவு மற்றும் அதற்கான ஆற்றலை குறைக்கலாம் என எண்ணியுள்ளனர்.

“ சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் உள்ள செங்க்டு நகரத்தில் 2020-ம் ஆண்டில் Xichang satellite launch center-ல் இருந்து முதல் பரிசோதனை செயற்கை நிலா(Illuminating satellite) செலுத்தப்பட உள்ளது. இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்றால் 2022-ம் ஆண்டில் அதேபோன்று 3 செயற்கை நிலாக்கள் செலுத்தப்படும் என Tian Fu news area science society-ன் தலைமைப் பொறுப்பாளர் Wu Chunfeng  சீன ஊடகங்களில் தெரிவித்து உள்ளார் “.  

சீனாவின் செயற்கை நிலா பூமியில் இருந்து 500 கிலோமீட்டர் தொலைவிலும், நிலவில் இருந்து 3,80,00 கி.மீ தொலைவில் இருக்குமாறு பொருத்தப்படும். மனிதனால் செயற்கையாக உருவாக்கப்படும் “ ஒளிப் பாய்ச்சும் செயற்கைக்கோள் “ முழு இரவு வானத்திற்கும் வெளிச்சத்தை அளிக்க முடியாது. இருப்பினும், தெரு விளக்குகளில் ஐந்தில் ஒன்று என மனிதர்களின் கண்களால் பார்க்கும் அளவிற்கு ஒளி வீசும் என Wu Chunfeng  கூறியுள்ளார்.

Advertisement

இதன் நோக்கமே நகர்புறங்களில் உள்ள தெரு விளக்குகளின் பயன்பாட்டை குறைத்து மின்சார செலவையும் குறைப்பதே..! செங்க்டு நகரின் 50 கி.மீ  பரப்பிற்கு ஒளி வீசும் செயற்கை நிலவால் 1.2 பில்லியன் yuan அளவிற்கு மின்சார செலவைக் குறைக்கலாம் என தோராயமாக கணக்கிடுகிறார்கள்.

ஆற்றல் பேரழிவு நேரங்களில் உபரியாக இருக்கும் இதுபோன்ற ஒளியால் நிவாரண பணிகள் மற்றும் மீட்பு பணிகளுக்கு பெருதவியாக இருக்கும் என கூறுகின்றனர். 2020-ல் செலுத்துவது சோதனையாக இருப்பினும் 2022-ல் முழு சக்தியுடன் வெளியாகும் என தெரிவித்து உள்ளனர்.

” சூரிய ஒளியின் உதவியால் செயற்கை ஒளி வீசுவதை கண்டுபிடிப்பதில் சீனா முதல் நாடு என்றுக் கூறி விட முடியாது. 1990 ஆம் ஆண்டில் ரஷ்ய விஞ்ஞானிகள் விண்வெளியில் இருந்து ஒளியை ராட்சத கண்ணாடிகள் மூலம் மறுபிரதிபலிப்பு செய்யும் Znamya அல்லது Banner எனும் ஆராய்ச்சியை மேற்கொண்டனர். அதன் சோதனையின் போது ஏற்பட்ட விபத்து மற்றும் அதிக பட்ஜெட் பிரச்சனையால் ரஷ்யாவின் முயற்சி ரத்து செய்யப்பட்டது “

சீனாவின் செயற்கை நிலாக்கள் பல நகரங்களின் மேலே ஒளிரும் என்பது விஞ்ஞானிகள் கருத்து. இவை எந்தளவிற்கு சாத்தியம் மற்றும் பின் விளைவுகள் பற்றி அதன் செயலாக்கம் பின்னரே அறிய முடியும்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button