சீனா அறிமுகப்படுத்திய அதிவேக பறக்கும் ரயில் எனப் பரவும் கேம் வீடியோ !

பரவிய செய்தி
பறக்கும் ரயில் என்கிறார்களே, அது சைனா அறிமகப்படுத்திய இந்த ரயிலுக்குதான் பொருந்தும். இந்த ரயிலுக்கு சக்கரங்கள் கிடையாது. அதற்கு பதில் அதிக சக்தி வாய்ந்த காந்தங்கள் உடைய பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கிறது. பார்ப்பதற்கு மிக ஆச்சரியமாகவும், விநோதமாகவும், நம்பமுடியாமலும் இருக்கிறது.
மதிப்பீடு
விளக்கம்
சீனா அறிமுகப்படுத்திய அதிவேகமான பறக்கும் அல்லது மிதக்கும் ரயிலுக்கு சக்கரங்கள் இல்லை, அதற்கு பதிலாக சக்தி வாய்ந்த காந்தங்கள் உடைய பெட்டிகள் வைக்கப்பட்டு இருப்பதாக 4.32 நிமிடம் கொண்ட இவ்வீடியோ பல மொழிகளில் பகிரப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
பறக்கும் ரயில் குறித்து தேடுகையில், ” 2020 ஆகஸ்ட் 10-ம் தேதி Dendi Komara Railfans ID யூடியூப் சேனலில் ” Kereta Api Turun dari Langit (Game Only) ” எனும் தலைப்பில் வெளியான வீடியோவில் வைரலாகும் 4 நிமிட காட்சி இடம்பெற்று இருப்பதை காணலாம்.
வீடியோவின் தலைப்பிலேயே ” கேம் மட்டும் ” எனக் குறிப்பிட்டு உள்ளனர். இந்த Simulation Clip-ஐ சீனாவின் பறக்கும் ரயில் எனத் தவறாக பரப்பி வருகிறார்கள.
சீனாவின் மேக்லெவ் ரயில்கள் சூப்பர் கன்டக்டரைப் பயன்படுத்தி எலெக்ட்ரோ-மேக்னட்டிக் ஃபீல்டு மூலம் பாதையில் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு தொழில்நுட்ப ரீதியாக சக்கரங்கள் இல்லை, குறைந்த உராய்வு காரணமாக அதிவேகமாக செல்லும் எனக் கூறப்படுகிறது.
2021 ஜனவரி 16-ம் தேதி மேக்லெவ் ரயிலின் முன் மாதிரி வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டது குறித்து சவுத் சீனா மார்னிங் போஸ்ட் வீடியோ வெளியிட்டு இருக்கிறது. இந்த வகை ரயில் மணிக்கு 620கிமீ வரை செல்லும் எனக் கூறுகின்றனர்.
சீனா அறிமுகப்படுத்திய மேக்லெவ் ரயில் அதிவேகமானவை எனக் கூறப்பட்டாலும், அது ஆகாயத்தில் பறக்காது ரயிலுக்காக பாதையிலேயே பயணிக்கும்.
முடிவு :
நம் தேடலில், சீனா அறிமுகப்படுத்திய பறக்கும் ரயில் எனப் பரவும் வீடியோ காட்சி கேம் வீடியோவில் இடம்பெற்ற காட்சிகளே என்றும், சீனா அறிமுகப்படுத்திய மேக்லெவ் ரயிலின் மாதிரி வடிவம் குறித்தும் அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.