நிலவில் தாவரத்தை முளைக்க செய்த சீனா | இறுதியில் என்ன ஆனது ?

பரவிய செய்தி
சீனா நிலவில் தாவரத்தை வளர்த்துள்ளது. அதில் இரண்டு இலைகள் முளை விட்டுள்ளன.
மதிப்பீடு
விளக்கம்
2019 ஜனவரி 3-ம் தேதி சீனாவின் சாங்’இ4 ரோபோட்டிக் ஆய்வு விண்கலம் ஆனது பூமியை நோக்கி இருக்கும் பகுதியில் இல்லாமல் நிலவின் இருள் சூழ்ந்த மறுபுறத்தில் தரையிறங்கி ஆராய்ச்சி மேற்கொண்டன. அதில், அப்பகுதியில் இருக்கும் நிலவின் மண்ணை ஆய்வு செய்யும் கருவிகளும் இருந்தன.
அதுமட்டுமின்றி, நிலவில் விண்கலனில் தாவரங்களை வளர்த்து அறுவடை செய்யும் சூழல் இருக்கிறதா என்ற ஆராச்சியையும் சீனா மேற்கொண்டது. இதற்காக சீனாவின் விண்கலனில் பருத்தி, உருளைக்கிழங்கு விதைகள், ஈஸ்ட் மற்றும் பழ ஈக்களின் முட்டைகள் கொண்ட மண்ணும் வைக்கப்பட்டு இருந்தன. இவை அனைத்தும் சீல் செய்யப்பட்ட பெட்டியில் வைக்கப்பட்டு இருந்தன.
First time for humankind: A seed taken up to #Moon by China’s Chang’e-4 probe has sprouted #ChangE4 pic.twitter.com/N6fA3A4ycv
— China Xinhua News (@XHNews) January 15, 2019
அவ்வாறு கொண்டு செல்லப்பட்டவையில் பருத்தி விதைகள் முளைவிட்டு இருப்பதாக ஜனவரி 2019-ல் சீன தேசிய விண்வெளி மேலாண்மை கழகம் (CNSA) படங்களுடன் தெரிவித்து இருந்தது. மேலும், சீனாவின் அதிகாரப்பூர்வ அரசு ஊடக தரப்பிலும் வெளியிடப்பட்டன. இந்த தகவல் உலக அளவில் செய்திகளாய் பரவி இருந்தன.
Seedlings in space! First-ever cotton plant on the Moon growing in #ChangE4 mini biosphere https://t.co/L8YpXqoVIG pic.twitter.com/3NVoCBUn5M
— China Xinhua News (@XHNews) January 15, 2019
அவ்வாறு முளைவிட்டு இலைகள் வெளியே வரும் பருத்தி தாவரத்தின் அதிகாரப்பூர்வ புகைப்படமானது சீனாவின் தரப்பில் வெளியிடப்பட்டன. ஆனால், சில செய்திகளில் காண்பிக்கப்பட்டு இருக்கும் புகைப்படமானது 3D தொழில்நுட்பத்தில் செய்யப்பட்டவை.
விண்வெளி வீரர்கள் தங்களின் உணவு தேவைக்காக சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திலேயே தாவரங்கள் வளர்க்கப்பட்ட நிகழ்வுகள் நிகழ்ந்து உள்ளன . ஆனால், நிலவில் இதுவே முதல் முறையாக இருந்தது. இந்த முறை, விண்வெளியிலேயே உணவை அறுவடை செய்து கொள்ள விண்வெளி வீரர்களுக்கு பெரிதும் பயனாக இருக்கும் என கூறப்பட்டது .
ஆனால், அந்த சாதனை நீண்ட காலம் நீடிக்கவில்லை. நிலவின் இரவு நேர தட்பவெப்ப சூழலைத் தாக்கு பிடிக்க முடியாமல் பருத்தி விதையின் முளை கருகி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. முதல்முறையாக நிலவில் துளிர்விட்ட தாவரம் இறந்தது விஞ்ஞானிகளை வருத்தமடையச் செய்தது.