This article is from May 20, 2019

சீனாவில் உள்ள கோவிலில் நரசிம்மர் சிற்பம் இருப்பது உண்மையா ?

பரவிய செய்தி

சீனாவின் Quanzhou மாகாணத்தில் kaiyuan கோவில் 12-ம் நூற்றாண்டில் சீனாவில் வாழ்ந்த தமிழ் வணிகர்களால் கட்டப்பட்ட சிவன் ஆலயமாகும். அங்குள்ள ஒரு தூணில் அசுரனை வதைக்கும் நரசிம்மரின் சிற்பம்.

மதிப்பீடு

சுருக்கம்

Quanzhou மாகாணத்திற்கும், தமிழர்களுக்கும் இடையேயான உறவு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது. இதற்கு உதாரணமாக, kaiyuan புத்த கோவிலின் தூண்களில் நரசிம்மரின் உருவம் மற்றும் இந்து நம்பிக்கையின் அடையாளங்கள் அதிகம் இடம்பெற்றுள்ளதை காணலாம்.

விளக்கம்

இன்றைய காலக்கட்டத்தில் சீனாவிற்கும், இந்தியாவிற்கும் இடையே பதற்றமான உறவே இருந்து வருகிறது. ஆனால், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மன்னர்கள் காலத்தில் இரு நாடுகளுக்கு இடையே வணிகரீதியில் நட்புறவு நன்றாகவே இருந்துள்ளது. குறிப்பாக, தென்னிந்தியர்களுக்கு எனக் கூறினால் பொருத்தமாக இருக்கும்.

சீனாவில் உள்ள Quanzhou மாகாணத்தில் இருக்கும் பெரும்பாலான கோவில்களில் இந்து மதத்தின் அடையாளங்கள் இன்றும் காணப்படுகின்றன. அங்குள்ள கட்டிடக்கலை தென்னிந்தியாவில் இருக்கும் கட்டிடக்கலையுடன் ஒத்து உள்ளன.


Quanzhou மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தமிழ் வணிகர்கள் 800 ஆண்டுகளுக்கு முன்பு வரை அங்கு வாழ்ந்து தங்களின் வேலைப்பாடுகளை விட்டு சென்றுள்ளனர். எனினும், 6 நூற்றாண்டில் இருந்தே இந்திய மக்கள் அங்கு வசித்ததற்கான குறிப்புகள் இருப்பதாக சீன அறிஞர் வாங் தெரிவித்து உள்ளார்.

Quanzhou-வில் நகரின் மையத்தில் இருக்கும், மக்கள் அதிகம் வருகை தரும் 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மற்றும் அங்கு இருக்கும் கோவில்களில் பெரிய கோவிலான kaiyuan புத்த கோவிலின் தூண்களில் நரசிம்மரின் உருவம் மற்றும் இந்து மத நம்பிக்கையின் அடையாளங்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன. இங்கு விஷ்ணு, நடராஜர், பைரவர் உள்ளிட்ட சிற்பங்களை காண முடியும்.

சீனாவில் சாங்(960-1279) மற்றும் யுவன் (1279-1368) பேரரசுகளின் ஆட்சிக் காலத்தில் தமிழ் வணிகர்கள் அங்கு வாழ்ந்து உள்ளனர். மேலும், சில பெரிய அளவிலான கோவில்களையும் அங்கு கட்டியுள்ளனர்.

தமிழ் வணிகர்களின் வாழ்விற்கு பிறகு அப்பகுதியில் இருந்த கோவில்களில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. kaiyuan கோவில் தற்பொழுது மிகப்பெரிய புத்த வழிபாட்டு தலமாக இருக்கிறது.

சீனாவின் Quanzhou maritime மியூசியத்தில் எண்ணற்ற இந்து மத கடவுள்களின் சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தமிழ் மற்றும் சீன மொழியில் இடம்பெற்ற கல்வெட்டுகள் குறித்தும் முன்பு ஒருமுறை கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

மேலும் படிக்க : சீனாவில் உள்ள சிவன் ஆலயமா ?

kaiyuan கோவிலில் இருந்து சில கிமீ தொலைவில் இருக்கும் பகுதியில் சில அடி உயரம் கொண்ட சிவ லிங்கம் இன்றும் இருந்து வருகிறது. kaiyuan புத்த-இந்து கோவில் 12 நூற்றாண்டில் கட்டப்பட்டவை அல்ல,அவை 7-ம் நூற்றாண்டில்(கிபி686) தமிழ் வணிகர்களால் கட்டப்பட்டவை என்பதை அங்குள்ள கட்டிடக்கலையே நிரூபிக்கின்றன.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader