Fact Checkஅறிவியல்சமூக ஊடகம்சர்வதேசம்

சீனாவில் புழு மழைப் பெய்ததாகப் பரவிய வதந்தி.. உண்மை என்ன ?

பரவிய செய்தி

*சீனாவில் பெய்த புழு மழை; அதிர்ச்சியில் மக்கள்!*

மதிப்பீடு

விளக்கம்

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் வானில் இருந்து திடீரென புழு மழைப் பெய்ததால் மக்கள் பீதி அடைந்து உள்ளதாக 11 நொடிகள் கொண்ட வீடியோ ஒன்று இந்திய அளவில் வைரலாகி கொண்டிருக்கிறது.

Advertisement

வைரல் செய்யப்படும் வீடியோவில், வரிசையாக நிற்கும் கார்களின் மீது பெரிய தடிமனான  கொத்து கொத்தாக படர்ந்து இருப்பதை பார்க்க முடிந்தது. அவை பார்பதற்கு கம்பளிப்பூச்சி போன்றும் காணப்படுகிறது.

Twitter link | Archive link 

சீனாவில் புழு மழைப் பெய்ததாக பரவிய வீடியோ குறித்து ஆங்கிலச் செய்திகளிலும் வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோவை கொல்கத்தாவில் உள்ள இஸ்கான் அமைப்பின் துணைத் தலைவர் ராதாராம் தாஸ் விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டு இருந்துள்ளார்.

உண்மை என்ன ? 

Twitter link | Archive link 

வைரல் செய்யப்படும் வீடியோவை பதிவிட்ட பிரேசிலைச் சேர்ந்த ரியோ டைம்ஸ் பதிவிற்கு சீனாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் சென் ஷிவெய், ” இந்த வீடியோ போலியானது. நான் பெய்ஜிங்கில் தான் உள்ளேன். இந்த நாட்களில் பெய்ஜிங்கில் மழை பெய்யவில்லை ” என பதில் அளித்து இருக்கிறார்.

அடுத்ததாக, வீடியோவில் உள்ள வாகனத்தின் எண்ணை வைத்து தேடுகையில், அந்த எண் சீனாவின் ஷென்யாங் மாகாணத்தில் உள்ள லியோனிங் எனும் நகரத்தைச் சேர்ந்தது எனக் கண்டுபிடிக்க முடிந்தது.

Twitter link | Archive link 

வைரல் வீடியோவைப் பதிவிட்ட இன்சைடர் பேப்பர் ட்விட்டர் பதிவின் கமெண்ட்டில் Vxujianing எனும் ட்விட்டர் பக்கத்தில் இருந்து, ” இது பொய்யான செய்தி. இவை கம்பளிப்பூச்சிகள் அல்ல, பாப்லர் மரங்களின் பூக்கள். பாப்லர் மரத்தின் கூர்மையான மொட்டுகள் விழுவது அவை பூக்கிறது என்பதைக் குறிக்கிறது ” என ஆங்கிலம் மற்றும் சீன மொழியில் சில புகைப்படங்கள் உடன் பதிவிடப்பட்டு உள்ளது

அப்பதிவில், பாப்லர் மரத்தின் காய்ந்த பூக்கள் மரத்தில், காரின் மீது, நடைபாதை மீது படர்ந்து இருக்கும் புகைப்படமும், அவற்றை சுத்தம் செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இணைக்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்து தேடிய போது, பாப்லர் மரத்தின் மொட்டுகள் மற்றும் அவை காய்ந்த பிறகு தரையில், கார்கள் மீது விழுந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சில இணையதளங்களில் காண முடிந்தது. அவை பார்க்க கம்பளிப்பூச்சி போல் இருப்பதைப் பார்க்கலாம்.

Twitter link | Archive link 

மார்ச் 11ம் தேதி JorunoTurk எனும் ட்விட்டர் பக்கத்தில், சீனாவில் புழு மழைப் பெய்ததாக செய்தித்தாள்கள் மற்றும் டிவி சேனல்களில் தவறான செய்திகள் வெளியாகி வருவதாக கூறி வீடியோ ஒன்று வெளியிடப்பட்டு இருக்கிறது. வேறொரு கோணத்தில் எடுக்கப்பட்ட வீடியோவின் இறுதியில் காருக்கு அருகே மரங்கள் இருப்பதை பார்க்க முடிந்தது. மேலும், இரண்டு வீடியோவிலும் 辽 A 97RMO என்ற எண் கொண்ட கார் இடம்பெற்று இருக்கிறது.

முடிவு : 

நம் தேடலில், சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் புழு மழைப் பெய்ததாகப் பரப்பப்படும் வீடியோ தவறனது. அந்த செய்தி உண்மையல்ல. வைரல் வீடியோவில் காரின் அருகே உள்ள மரத்தில் இருந்து விழ்ந்த காய்ந்த பாப்லர் மரத்தின் பூக்கள் என உறுதி ஆகிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button