சீனாவில் உள்ள சிவன் ஆலயமா ?

பரவிய செய்தி

சீன நாட்டு சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு. தமிழ்நாட்டுக்கு வெளியே கண்டெடுக்கப்பட்ட மிக அபூர்வமான தமிழ் கல்வெட்டு.

மதிப்பீடு

சுருக்கம்

எது உண்மை : சீன மொழி மற்றும் தமிழ் மொழி பொறிக்கப்பட்ட கல்வெட்டு உண்மை.

 எது உண்மை இல்லை : சீனாவில் உள்ள சிவன் ஆலயம் என இணைக்கப்பட்ட கோவிலின் படங்கள் கம்போடியாவின் அங்கோர் வாட்.

விளக்கம்

தமிழ் மன்னர்களின் வணிகம் மற்றும் ஆளுகை கடல் கடந்து விரிந்து இருந்தது எனக் கூறுவது மிகைப்படுத்தப்பட்டது அல்ல. பண்டைய மன்னர்களின் நட்புறவு, ஆட்சி கடல் கடந்து இருந்ததற்கு அடையாளமாய் அயல்நாடுகளில் இன்றும் பழமையானக் கோயில்கள் காணப்படுகின்றன.

Advertisement

சீனாவிலும் தமிழ் மொழியும், இந்து மதமும் சென்றுள்ளது என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் உள்ளன. சீன தேசத்தில் பழமையான சிவன் ஆலயத்தில் தமிழ் மற்றும் சீன எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு என கோவிலின் புகைப்படமும், கல்வெட்டின் படமும் இணைக்கப்பட்டு சில வருடங்களாகவே பரவி வருகிறது.

கல்வெட்டுக் குறித்த படமும், கோவிலின் புகைப்படங்கள் உண்மையாக தமிழ் மன்னரால் உருவானது என்றாலும், படங்கள் தவறாக இணைக்கப்பட்டவை என்பதை தெளிவுபடுத்தியாக வேண்டி உள்ளது.

கல்வெட்டு : 

Bilingual எனப்படும் தமிழ் மற்றும் சீன மொழி கலந்து பொறிக்கப்பட்ட கல்வெட்டு சீன வரலாற்றின்படி சகா சகாப்தம் 1203(1281CE)-ஐ சேர்ந்தது. சீன மன்னர் cekacaikan Parman மற்றும் திருக்கனிக்குறமுடையார் என்ற கடவுளின் பெயரும் பொறிக்கப்பட்டு உள்ளது.

அங்கோர் வாட் :

Advertisement

கம்போடியா தேசத்தில் உள்ள விஷ்ணு ஆலயமாகக் கட்டப்பட்ட அங்கோர் வாட் கோவில் தமிழ் மன்னரால் உருவானது என்பது பலரும் அறிந்து இருக்க மாட்டார்கள். தமிழ் மன்னரான சூரிய வர்மன் khmer அரசை ஆண்ட பொழுது கட்டத் துவங்கி ஜெயவர்மன் ஆல் முடிக்கப்பட்டது.

162.6 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்து இருக்கும் இக்கோயில் உலகில் உள்ள மிகப்பெரிய சமய நினைவுச் சின்னமாகும். 12-ம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து அங்கோர் வாட் புத்த ஆலயமாக வழிப்படப்படுகிறது.

அங்கோர் வாட் கோவிலின் பகுதிகள் மற்றும் சிற்பத்தை சீனாவில் உள்ள சிவன் ஆலயம் என தவறாக கூறியுள்ளனர். சீனாவில் சிவன் கோவில் மற்றும் கல்வெட்டு என பரவிய மீம்-க்கு அடிப்படையாக இருந்தது Tamilcnn தளத்தில் வெளியான சீன கோவில் பற்றிய கட்டுரையே! அதில் இப்படங்கள் இருந்துள்ளன.

சீன மொழி மற்றும் தமிழ் மொழியில் கல்வெட்டு சரியான தகவலாக இருந்தாலும், அங்கோர் வாட் கோயிலை சீனாவில் உள்ள சிவன் கோவில் என தவறாக இணைத்து உள்ளதை குறிப்பிட் வேண்டிய அவசியம் உள்ளது.

“  அங்கோர் வாட் கோவில் கம்போடியா நாட்டின் தேசியக் கொடியில் இடம்பெற்றுள்ளது என்பது கூடுதல் தகவல்

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button