சீனாவில் தயாரிக்கப்பட்ட செயற்கையான பெண் எனப் பரவும் வதந்தி வீடியோ

பரவிய செய்தி

சீனாவில் தயாரிக்கப்பட்ட செயற்கை பெண்… இந்திய இளைஞர்களை குறிவைத்து இந்த “ஹூரி”யை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Facebook link

மதிப்பீடு

விளக்கம்

” சீனாவில் தயாரிக்கப்பட்ட செயற்கை பெண். சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உடல் இறைச்சி 100% ஃபாண்டா ஃபிளெஷ் மெட்டீரியல் சிலிகான் பாகங்கள் மூலம் தயாரிக்கப்பட்டது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 72 மணி நேரம் தடையின்றி வேலை செய்யும். ஆன்மா / ஆவி இல்லை. உணவு தேவையில்லை. இதன் சந்தை விலை ரூ.200000+வரியுடன் “HOORI” என்று பெயரிடப்பட்டுள்ளது.

இது செயற்கை நுண்ணறிவில் செயல்படுவதால் எந்த மொழியையும் 99% துல்லியத்துடன் பேச முடியும். இந்திய இளைஞர்களை குறிவைத்து இந்த “ஹூரி”யை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வரதட்சணை இல்லை… ஜாதகம் இல்லை ” எனக் குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?

சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவலில் உள்ள ரோபோவின் பெயரைக் கொண்டு இணையத்தில் தேடினோம். ‘குரி’ என்ற ரோபோ குறித்து பிபிசி-ல் 2018, ஜூலை 25ம் தேதி செய்தி வெளியிடப்பட்டு உள்ளது.

Archive link

அந்த செய்தியில், சமீபத்தில் அதிக சுவாரசியம் கொண்டிருந்த வீட்டு உபயோக ரோபோ, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விற்பனைக்கு வருவதற்கு முன்னதாகவே ரத்து செய்யப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ரோபோ குழந்தைகளுடன் விளையாடுவதற்கும், குரல் கட்டளைகளுக்குப் பதில் அளிப்பதற்கும், வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

Archive link

குரி ரோபோ உற்பத்தி நிறுத்தப்படுவது குறித்து ‘குரி’ என்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அதில் இதுவரையில் உற்பத்தி செய்த குரி ரோபோக்கள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படமாட்டது. முன்கூட்டி பணம் செலுத்தி ஆர்டர் செய்தவர்களுக்குப் பணம் திருப்பி அளிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Archive link

மேலும், அதே இணையதளத்தில் 2018, ஆகஸ்ட் 21ம் தேதி ‘The Future of Mayfield Robotics’ Kuri Home Robot’ என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், 2018 அக்டோபர் 31ம் தேதியுடன் Mayfield Robotics என்ற நிறுவனம் தனது அனைத்து உற்பத்தியையும் நிறுத்துவதாகத் தெரிவித்துள்ளது. 

வைரல் வீடியோவில் உள்ளது யார் ?

பரப்பப்படும் வீடியோவில் உள்ள பெண் யார் என்பது குறித்துத் தேடினோம். Shravya.quinnzel என்ற இன்ஸ்டகிராம் பக்கத்தில் பரவக்கூடிய வீடியோ கிடைத்தது. அந்த வீடியோவை கடந்த மே மாதம் 7ம் தேதி அவர் பதிவிட்டுள்ளார்.  அதில் ‘Pubg Sara’ எனக் குறிப்பிட்டுள்ளார். அதே உடையில் வேறு சில வீடியோ மற்றும் புகைப்படங்களையும் அவர் பதிவிட்டுள்ளார். அப்பெண் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பொம்மை மாதிரி வெவ்வேறு உடைகளில் எடுக்கப்பட்ட வீடியோக்களையும் பதிவு செய்துள்ளதைக் காண முடிகிறது.

மேலும் Shravya குறித்து இணையத்தில் தேடியதில், கடந்த நவம்பர் 7ம் தேதி Behindwoods O2 யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்ட  நேர்காணல் ஒன்று கிடைத்தது. “நான் ROBOT இல்ல பொண்ணு..!” மக்களை மிரள வைத்த பொம்மை பெண்..! VIRAL DOLL SHRAVYA பேட்டி” எனத் தலைப்பிடப்பட்ட அந்த வீடியோவின் 5வது நிமிடத்திற்கு மேல் வைரல் செய்யப்படும் வீடியோ குறித்துப் பேசியுள்ளார்.

“பப்ஜி விளையாட்டில் வரும் சாரா போலச் செய்திருந்தேன். அது மிகவும் டிரென்ட் ஆகியது. அதனைச் சீனால் தயாரிக்கப்பட்ட ரோபோ எனப் பரப்பப்பட்டது ” எனக் குறிப்பிடுகிறார்.

முடிவு :  

நம் தேடலில், சீனாவில் தயாரிக்கப்பட்ட செயற்கை பெண் என இணையத்தில் பரவும் வீடியோ உண்மை அல்ல. அது ஸ்ரவ்யா என்ற பெண் பப்ஜி-யில் வரும் சாரா போன்று செய்தது என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader