This article is from Sep 24, 2018

தமிழ் பேராசிரியரான சீனப் பெண் Zhou Xin..!

பரவிய செய்தி

சீனாவின் பெய்ஜிங் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி..! ஈஸ்வரி என்றழைக்கப்படும் Zhou xin பெய்ஜிங் பல்கலைக்கழகத்தின் தமிழ் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் கலாச்சாரத்தை சீன மக்களிடம் கொண்டு செல்வதே தனது நோக்கம் என்றுள்ளார். உலகின் பழமையான தமிழ் மொழியை சீன மாணவர்கள் கற்க ஆர்வம் கொள்வது மகிழ்ச்சிகரமான செய்தி.

மதிப்பீடு

சுருக்கம்

தமிழ் மொழியின் மீது கொண்ட பற்றால் தன் பெயரை ஈஸ்வரி என மாற்றிக் கொண்டுள்ளார் Zhou Xin . பெய்ஜிங் பல்கலைக்கழகத்தின் தமிழ் துறையில் ஈஸ்வரி மற்றும் வீராசாமி ஆகியோர் தமிழ் பேராசிரியராக உள்ளனர். சீனாவில் தமிழ் மொழியை கற்க மாணவர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர்.

விளக்கம்

Zhou Xin கொஞ்சும் தமிழை பேசும் சீனப் பெண். தமிழ் நாட்டில் இன்றளவும் சிலரால் புரிந்து கொள்ள முடியாத விதத்தில் பேசும் தூய தமிழை நன்றாக உச்சரிக்கின்றார் பெய்ஜிங்கில் பிறந்த Zhou Xin. தமிழ் மொழியின் மீது கொண்ட பற்றால் தன் பெயரை ஈஸ்வரி என மாற்றிக் கொண்டுள்ளார் Zhou Xin. தமிழை பேசும் சீனப் பெண் என ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமானவர்.

ஈஸ்வரி சீனாவின் தேசிய ரேடியோவில் (CRI) தமிழ் பிரிவில் அறிவிப்பாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றி உள்ளார். Communication university of china-வில் தமிழை சிறப்பு கவனமாக கொண்ட mass communication-ல் பட்டம் பெற்ற பிறகு தனது பெயரை ஈஸ்வரி என மாற்றி உள்ளார்.

ஈஸ்வரியின் இரட்டை சகோதரியான Zhou Yuan உருது மொழியின் மீது ஆர்வம் கொண்டு அம்மொழியைக் கற்றுக் கொண்டு தன் பெயரை நஸ்ரின் என மாற்றிக் கொண்டுள்ளார். அவர் பெய்ஜிங் வெளிநாட்டு மொழி ஆய்வு பல்கலைக்கழகத்தில் உருது கற்பிக்கும் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

பாண்டிச்சேரியில் உள்ள “ puduchery institute of linguistic and culture “ – ல் நடைமுறை தமிழ் மொழியை கற்க சீன உதவித்தொகை ஆறு மாதங்களுக்கு( 2013-2014 ) ஈஸ்வரிக்கு வழங்கப்பட்டது. நடைமுறையில் பேசப்படும் தமிழுக்கும் தாம் பேசிய தமிழுக்கும் வேறுபாடுகள் இருப்பதால் பெய்ஜிங் வரும் தமிழ் பிரபலங்களை பேட்டி எடுக்க சிரமப்பட்டதாக ஈஸ்வரி தெரிவித்து இருந்தார். பின் பல பிரபலங்களை CRI-க்காக பேட்டி எடுத்துள்ளார். அதில், பம்பாய் ஜெயஸ்ரீ, பின்னணி பாடகி அனுபமா ஆகியோரும் அடங்குவர்.

” சீனாவில் உள்ள பெய்ஜிங் வெளிநாட்டு மொழி ஆய்வு பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு தமிழ் மொழியில் இளங்கலைப் பட்டப்படிப்பு துவங்கப்பட்டுள்ளது. இதில், பெய்ஜிங், யூனான், ஷேன்டாங் உள்ளிட்ட பகுதியில் இருந்து 10 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். பல்கலைக்கழகத்தின் தமிழ் துறையில் முனைவர். கலாதி வீராசாமி மற்றும் ஈஸ்வரி ஆகியோர் பேராசிரியராக பணியாற்றி வருகின்றனர் “.

பெய்ஜிங் பல்கலைக்கழகத்தின் தமிழ் துறையில் பயிலும் மாணவர்களுக்கு தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தமிழ் மொழியை எழுதுவது, உச்சரிப்பது, மொழிபெயர்ப்பு போன்றவை கற்பிக்கப்படும். நான்கு ஆண்டுகள் முடிவடைந்த பிறகு மாணவர்களுக்கு தமிழ் மொழி மற்றும் இலக்கியத்திற்கான பட்டம் வழங்கப்படும்.

” 2018-ல் லண்டனில் நடைபெற்ற சர்வதேச திருக்குறள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பேராசிரியர்.ஈஸ்வரி தமிழில் தனது சொற்பொழிவை ஆற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது “

தன்னை போன்று தமிழ் கற்க முன்வந்த மாணவர்கள் தமிழ் மொழியின் மூலம் கலாச்சாரம், பண்பாட்டை அறிந்து ஓர் புதிய உலகில் புது வாழ்வை வாழ்வர் என்கிறார் ஈஸ்வரி.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader