கனல் கண்ணன் பகிர்ந்த வீடியோவில் பெண்களுடன் நடனமாடுவது உண்மையான பாதிரியார் அல்ல!

பரவிய செய்தி
வெளிநாட்டு மத கலாச்சாரத்தின் உண்மை நிலை இதுதான்???!!!! மதம் மாறிய இந்துக்களே சிந்தியுங்கள்!!!! மனம் திரும்புங்கள்!!!
மதிப்பீடு
விளக்கம்
கிறிஸ்துவப் பாதிரியார் ஒருவர் பெண்களுடன் நெருக்கமாக நடனம் ஆடுவது போன்ற வீடியோ ஒன்று நடிகர் கமலக்கண்ணன் மற்றும் இந்து மக்கள் கட்சியின் தலைவரான அர்ஜுன் சம்பத் போன்ற வலதுசாரிகளால் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.
மேலும் பரவி வரும் வீடியோவில் “வெளிநாட்டு மத கலாச்சாரத்தின் உண்மை நிலை இதுதான்???!!!! மதம் மாறிய இந்துக்களே சிந்தியுங்கள்!!!! மனம் திரும்புங்கள்!!!” என்றும், “பரிசுத்த ஆத்மா போக முடியாத அளவிற்கு நடனம் ஆடுகிறார்கள்” என்றும் அந்த வீடியோவை கேலி செய்து பரப்பி வருகின்றனர்.
பரிசுத்த ஆத்மா போக முடியாத அளவுக்கு கேப் விடாம ஆடுறாங்கப்பா.
We stand with Kanal Kannan. pic.twitter.com/XdbNZ9ZYZ8
— Indu Makkal Katchi (Offl) 🇮🇳 (@Indumakalktchi) July 12, 2023
வெளிநாட்டு மத கலாச்சாரத்தின் உண்மை நிலை இதுதான்???!!!!
மதம் மாறிய இந்துக்களே சிந்தியுங்கள்!!!!
மனம் திரும்புங்கள்!!!@hindumunnani_tn @RSSorg @VHPDigital @elangovan_HM @ManaliManoharHM @RajeshHM_org pic.twitter.com/tukPFmrgjn— KAJENDRAN KRISHNANॐ (@Kajendran111) July 10, 2023
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவில் உள்ள கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ கடந்த ஜூன் 20 அன்று ‘papapopodoasfalto’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘Inacio Falcao Falcào’ என்ற பயனரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதைக் காண முடிந்தது.
மேலும் அவருடைய சுயவிபரங்கள் (Bio) குறித்து அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தேடியதில், அவர் ஒரு நடிகர் என்பதையும் உறுதிபடுத்த முடிந்தது.
View this post on Instagram
மேலும் இது குறித்து ட்விட்டர் பக்கங்களில் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த பாதிரியாரின் நடனம் குறித்து ‘boatos’ தனது இணையதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள கட்டுரையை ELittle Lula என்பவரது ட்விட்டர் பக்கத்தில் காண முடிந்தது.
He is NOT a priest! June and July are a season for country-side religious related folklore celebrations in Brazil! Many dress up as religious figures!https://t.co/Pb0oKY9TZB
— ELittle Lula🚩🦑🦑🦑🚩 (@Elittle07195740) July 8, 2023
மேலும் ‘Boatos’ ஊடகம் வெளியிட்டுள்ள அந்த கட்டுரையில், “பிரேசில் நாட்டில் நடந்த ஜூன் திருவிழாவின் (June Festival) போது எடுக்கப்பட்ட வீடியோ இது. மேலும் இது Papa Popo என்ற பாதிரியாரின் வேடத்தில் இனாசியோ ஃபால்கோ (Inácio Falcão) என்ற நடிகர் நடித்த போது எடுக்கப்பட்ட வீடியோ.” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அவருடைய ‘papapopocaruaru’ என்ற யூடியூப் பக்கத்தில் இது குறித்து மேலும் தேடியதில், சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவை இங்கும் காண முடிந்தது. மேலும் அவருடைய சுயவிபரத்தில் “தன்னுடைய பெயர் இனாசியோ ஃபால்கோ (Inácio Falcão). கர்வாரில் (Caruaru) பிறந்த நான் ஒரு நடிகன். Papa Popó Caruaru என்ற பாதிரியாரின் கதாபாத்திரத்தை உருவாக்கியவன்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முடிவு:
நம் தேடலில், பாதிரியார் பெண்களுடன் நெருக்கமாக நடனமாடுவதாக சமூக வலைதளங்களில் வலதுசாரிகளால் பரப்பப்பட்டு வரும் தகவல்கள் தவறானவை என்பதையும், அது உண்மையில் பிரேசிலியன் நடிகரான இனாசியோ ஃபால்கோ (Inácio Falcão) என்பவர் நடனமாடியுள்ள வீடியோ என்பதையும் அறிய முடிகிறது.