திருப்பதி மலையில் சர்ச் கட்டப்பட்டுள்ளதா ?| வைரலாகும் கட்டிடத்தின் உண்மை என்ன ?

பரவிய செய்தி

திருப்பதி மலையில் சர்ச் கட்டியாச்சி..இனி வெங்கடேஸ்வரருக்கான கோவிந்த நாமம் அல்லேலூயாவாக்கப்படும். வெங்கடாசலபதி கிறிஸ்தவராக்கப்படுவாரு. அடி மடியிலேயே கைய வச்சாச்சு. ஆந்திராவுல ஓட்டு போட்டு இவனை ஜெயிக்க வெச்ச ஹிந்துக்களால, உலகம் மொத்தமும் இருக்கு ஹிந்துக்கள் மனசுல அழ வேண்டிய நிலைமை. பிசாசை விரட்ட வேண்டி சூனியக்காரியை வளர்த்து விட்ட கதைதான் ஆகப்போகுது. ஜெகன்மோகன் ரெட்டி ஹிந்துவாயிட்டாருன்னு பொங்கினவங்க எல்லாம் வரிசைல வாங்க.

மதிப்பீடு

விளக்கம்

ஆந்திர மாநிலத்தின் முதல்வரான ஜெகன் மோகன் மீது முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டு வருகிறது. ஜெகன் மோகன் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு திருப்பதி மலையில் கிறிஸ்தவ தேவாலயம் கட்டப்பட்டு உள்ளதாக மலையின் மீது இருக்கும் கட்டிடத்தின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

Advertisement

ஆகஸ்ட் 24-ம் தேதியில் இருந்து ” திருப்பதி மலையில் சர்ச் கட்டியாச்சி..இனி வெங்கடேஸ்வரருக்கான கோவிந்த நாமம் அல்லேலூயாவாக்கப்படும் ” என்ற வாசகத்தை பல தமிழ் முகநூல் பக்கங்கள், தனிநபர் கணக்குகள், குழுக்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இதற்கு முன்பாக பிற மாநிலங்களிலும் ட்விட்டர், முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட தளங்களில் மலையின் மீது இருக்கும் கட்டிடத்தின் புகைப்படம் பதிவாகி ஆயிரக்கணக்கில் ஷேர் செய்யப்பட்டுள்ளது. தொலைவில் இருந்து பார்க்கும் பொழுது கட்டிடத்தின் மீது சிலுவை இருப்பது போன்று தெரிகிறது. அதுவே அனைவரின் பதிவிற்கும் காரணமாகி இருக்கலாம்.

உண்மை என்ன ?

Advertisement

திருப்பதி மலையில் ஆந்திர அரசு கிறிஸ்தவ தேவாலயக் கட்டிடத்தை நிறுவி உள்ளதா என்பது குறித்து ஆராய்ந்தோம். தமிழில் பரவியது போல் தெலுங்கு மொழியில் சமூக வலைதளப் பதிவுகளிலும் திருப்பதி மலையில் கிறிஸ்தவ தேவாலயம் அமைக்கப்பட்டு இருப்பதாக வைரலாகியது. இதுதொடர்பாக Bharat today என்ற தெலுங்கு செய்தி சேனல் களத்திற்கு சென்று கட்டிடம் குறித்த பிரத்யேகச் செய்தியை வெளியிட்டனர்.

திருமலையில் கிறிஸ்தவ தேவாலயம் எனக் கூறும் கட்டிடம் ஆந்திர அரசின் வனத்துறைக்கு சொந்தமான அலுவலகக் கட்டிடமாகும். செய்தியில் வெளியான வீடியோவில் அக்கட்டிடத்தின் நுழைவாயிலில் ” Seshachalam Biosphere Reserve , Wildlife management division, Tirupati ” என எழுதப்பட்டு இருப்பதை காணலாம்.

தொலைவில் இருந்து பார்க்கும் பொழுது கட்டிடத்தின் மீது சிலுவை இருப்பது போன்று தென்பட்டது. ஆனால், அந்த கட்டிடத்தின் மேலே ரிப்போர்ட்டர் சென்று பார்க்கையில் சிசிடிவி கேமரா பொருந்திய கம்பமே இருக்கிறது. கேமரா பொருத்தப்பட்ட கம்பமே தொலைவில் சிலுவை போன்று காட்சியளித்து இருக்கிறது.

முடிவு :

நம்முடைய தேடலில், திருப்பதி மலையில் உள்ள ஆந்திர அரசின் வனத்துறை அலுவலகத்தை கிறிஸ்தவ ஆலயம் என போலியான செய்தியை பரப்பி உள்ளனர் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.

கட்டிடத்தின் மேலே இருக்கும் சிசிடிவி கேமரா பொருந்திய கம்பமே தொலைவில் சிலுவை போல காட்சியளித்து இருக்கிறது. அதனை தவறான நினைத்து, உண்மையை அறியாமல் ஜெகன் மோகன் அரசு திருமலையில் தேவாலயத்தை கட்டியதாக தவறான செய்தியை இந்திய அளவில் வைரலாக்கி வருகின்றனர்.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button