ம.பியில் காங்கிரஸ் கட்சியினர் செருப்பால் அடித்துக் கொள்வதாகப் பரவும் பாஜகவினரின் பழைய வீடியோ !

பரவிய செய்தி

மத்திய பிரதேச காங்கிரஸ் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில் மகிழ்ச்சியில் இனிப்பு வழங்கி கொண்டாடிய தருணம்

Twitter Link | Archive Link

மதிப்பீடு

விளக்கம்

230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேசத்திற்கு வருகின்ற நவம்பர் 17 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இதற்கான முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி நேற்று (அக்டோபர் 16) வெளியிட்டது. இந்நிலையில் அங்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் செருப்பால் அடித்து சண்டை போட்டுக் கொள்வதைப் பாருங்கள் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

Archive Link:

Archive Link:

உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்ததில், இந்த வீடியோ மத்திய பிரதேசத்தை சேர்ந்தது அல்ல என்பதையும், உத்திரப்பிரதேசத்தில் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதையும் அறிய முடிந்தது.

இந்த வீடியோவை, Hindustan Times கடந்த 2019 மார்ச் மாதம், “பாருங்கள்: உபியில் பாஜக எம்எல்ஏவும் எம்பியும் ஒருவரையொருவர் செருப்பால் தாக்கிக் கொண்டனர், கூட்டம் நடக்கும் போதே அறைந்து கொண்டனர்” என்ற தலைப்பில் யூடியூப் தளத்தில் பரவி வரும் வீடியோவை வெளியிட்டிருந்தது.

மேலும் இந்த வீடியோவின் விளக்கத்திலும், உத்திரபிரதேசத்தில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தின் போது, ​​சந்த் கபீர் நகரின் பாஜக எம்பி ஷரத் திரிபாதியும், மேதாவால் தொகுதி எம்எல்ஏவான ராகேஷ் சிங் பாகேலும் சண்டையில் ஈடுபட்டனர். திரிபாதி தனது செருப்பால் பாகேலை அடிப்பதைக் காணக்கூடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஒரு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி பெயர் வைப்பது தொடர்பான வாக்குவாதத்தின் போது இந்த சண்டை ஆரம்பமானது ” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் 2019-இல் ‘நியூஸ் 18‘ வெளியிட்டுள்ள கட்டுரையிலும், “மாவட்டப் பொறுப்பு அமைச்சரான அசுதோஷ் தாண்டன் முன்னிலையில் நடந்த மாவட்டக் குழுக் கூட்டத்தில் இந்த சம்பவம் நடந்ததாகக் குறிப்பிட்டுச் செய்தி வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது. அதில், “பாஜக எம்பி ஷரத் திரிபாதி, உள்ளூர் சாலைக்கான அடிக்கல்லில் தனது பெயர் இல்லாததால் எம்எல்ஏ ராகேஷ் சிங்கிடம் கோபமடைந்தார்” என்றுள்ளது.

முடிவு:

நம் தேடலில், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியினர் செருப்பால் அடித்துக் கொள்ளும் காட்சி என்று பரவி வரும் வீடியோ, உத்திர பிரதேசத்தில் நடைபெற்ற மாவட்ட பாஜக கூட்டத்தின் போது பாஜக எம்பிக்கும், எம்எல்ஏவுக்கும் இடையே ஏற்பட்ட தகராறின் போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader