டெல்லி குடும்பநல நீதிமன்றத்தில் ஒரு குடும்பத்தாருக்குள் நடந்த சண்டையை MP ஸ்வாதி மலிவாலை அரவிந்த் கெஜ்ரிவாலின் பிஏ அடித்ததாக தவறாக பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

டெல்லி முதல்வர்களின் அதிகாரப்பூர்வ இல்லமான ஷீஷ் மஹாலில் இருந்து காட்சி இது கண்டிப்பாக நடக்கும், ஸ்வாதி மாலிவால் அடிக்கப்பட்டார், கெஜ்ரிவாலின் பிஏ அடித்தார், பலத்த அடி உதை என்று செய்திகள் வருகின்றன.

X Link

மதிப்பீடு

விளக்கம்

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. இதனை தொடர்ந்து கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமீன் மனுமீதான விசாரணை நடைபெற்றது. அதன் பின்னர், உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.  இந்நிலையில் தான், அரவிந்த் கெஜ்ரிவாலின் பிஏ, MP ஸ்வாதி மலிவாலை அடித்ததாகக் கூறி 0:49 நிமிடங்கள் கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகப் பரப்பப்படுகிறது.

உண்மை என்ன ?

பரவக் கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடினோம். இதே வீடியோ “Lokmat times media”  என்ற இன்ஸ்டகிராம் பக்கத்தில் மே14ம் தேதி 2024 அன்று பதிவிடப்பட்டிருந்ததை பார்க்க முடிந்ததது. 

 

View this post on Instagram

 

A post shared by Lokmat Times (@lokmattimesmedia)

அந்த பதிவில், டெல்லியின் திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் குடும்ப உறுப்பினர்கள் சமரச அறையில் ஒருவரையொருவர் மோதுவதைக் காட்டும் வீடியோ என நிலைத்தகவலில் (Description) குறிப்பிட்டு இருந்தது.

இந்த தகவலை வைத்து மேலும் தேடியதில், ”லீகள் லார்க்” (Legal Lark) என்ற  யூடியூப் பக்கத்தில் கடந்த மே 13 2024 அன்று (Scene from Tis Hajari court Mediation Centre today source Delh) என்று குறிப்பிட்டு இருந்ததை பார்க்க முடிந்தது. 

இவற்றிலிருந்து, இச்சம்பவம் டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் குடும்ப நபர்களுக்கு இடையே நடந்த சண்டை என்பதையும், அரவிந்த் கெஜ்ரிவாலின் பிஏ, MP ஸ்வாதி மாலிவாலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் அறிய முடிகிறது. 

முடிவு

நம் தேடலில், அரவிந்த் கெஜ்ரிவாலின் பிஏ ஸ்வாதி மாலிவாலை அடித்ததாக  பரப்பப்படும் வீடியோ உண்மை அல்ல. இந்த வீடியோ டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் குடும்ப நபர்களுகிடையே நடந்த சண்டை என்பது அறியமுடிகிறது.

Please complete the required fields.
Back to top button
loader