மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே குடித்து விட்டு பத்திரிகையாளரை சந்தித்தாரா ?

பரவிய செய்தி
மகாராஷ்ட்ராவின் புதிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே .. நிற்க முடியாத அளவு குடித்து விட்டு பத்திரிகையாளர்களை சந்திக்க வந்துள்ளார்.
மதிப்பீடு
விளக்கம்
சிவசேனா கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்கள் மற்றும் பாஜகவின் ஆதரவுடன் மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்றார். இந்நிலையில், புதிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பத்திரிகையாளர்களை சந்திக்க வரும் போது நிக்க முடியாத அளவிற்கு குடித்து விட்டு வந்ததாக 30 நொடிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
மகராஷ்ட்ராவின் புதிய முதல்வர் ஏக் நாத் ஷிண்டே .. நிக்க முடியாத அளவு குடித்து விட்டு பத்திரிகையாளர்களை சந்திக்க வந்துள்ளார் . @angry_birdu @sunnewstamil share to all pic.twitter.com/IB0RNsuDuj
— கோமாதா (@komu_123) July 12, 2022
வீடியோவில், பேருந்தில் இருந்து இறங்கி வரும் ஏக்நாத் ஷிண்டேவை பத்திரிகையாளர்கள் பலரும் சூழ்ந்து கேள்வி எழுப்புகின்றனர். கூட்டத்தில் அவர் தள்ளப்படுவதும், பேச முயற்சிக்கையில் தள்ளு முள்ளு நிகழ்வதும் நடக்கிறது.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் வீடியோவில் உள்ள ” MH04 Media ” எனும் லோகோவை வைத்து தேடுகையில், அந்த முகநூல் பக்கத்தில் வீடியோ பதிவு இடம்பெறவில்லை, நீக்கப்பட்டு இருக்கலாம் எனத் தோன்றியது.
மேற்கொண்டு தேடிய போது, ஜூன் 26-ம் தேதி மகாராஷ்டிரா பாஜகவைச் சேர்ந்த ரவிகாந்த் என்பவர்,” ஏக்நாத் ஷிண்டே குடித்து விட்டு வந்ததாக இவ்வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், அது உண்மை இல்லை. இதுவே முழுமையான வீடியோ ” என முகநூலில் MH04 Media உடைய ஒரு நிமிட வீடியோவைப் பதிவிட்டு இருக்கிறார்.
एकनाथ शिंदे दारू पिऊन आहेत असा विडिओ सध्या सामाज माध्यमांवर व्हायरल होतोय, त्यात काहीही तथ्य नाही तो सुरत येथील विडिओ अर्धवट एडिट करून मुद्दामून व्हायरल केला जातोय .
हा घ्या तो खरा पुर्ण विडिओ.👇 pic.twitter.com/qpWpVa9dZ9
— शिवानंद कबाडे (@sgkabade) June 25, 2022
இதேபோல் ஜூன் 25-ம் தேதி ட்விட்டர்வாசி ஒருவர் 1.30 நிமிட முழு வீடியோவையும் பதிவிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில், ” வைரலான காட்சிக்கு பிறகு ஏக்நாத் ஷிண்டே பத்திரிகையாளர்களிடம் தெளிவாய் பேசும் காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது.
ஜூன் 22-ம் தேதி ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்எல்ஏக்கள் உடன் சூரத் விமான நிலையம் வந்த போது செய்தி நிறுவனங்கள் சூழ்ந்து கொண்ட போது எடுத்த வீடியோவை என்டிடிவி சேனல் வெளியிட்டு இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், மகாராஷ்டிராவின் புதிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நிற்க முடியாத அளவு குடித்து விட்டு பத்திரிகையாளர்களை சந்திக்க வந்துள்ளார் எனப் பரப்பப்படும் தகவல் தவறானது.
வைரல் செய்யப்படும் வீடியோ அவர் முதல்வர் ஆவதற்கு முன்பாக தனது ஆதரவு எம்எல்ஏக்கள் உடன் சூரத் விமான நிலையத்திற்கு சென்ற போது எடுக்கப்பட்டது. வைரல் காட்சிக்கு பிறகு அவர் பத்திரிகையாளர்களிடம் தெளிவாய் பேசும் முழு வீடியோவையும் நம்மால் பார்க்க முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.