This article is from Apr 20, 2020

முதல்வர் பழனிச்சாமி சட்டையில் மோடியின் புகைப்படமா ?| பழைய மார்ஃபிங் படம்.

பரவிய செய்தி

தமிழகத்தில் அம்மாவின் பெயரை சொல்லி ஆட்சி செய்யும் இவர் எந்த கட்சியை சேர்ந்தவர்? ????

மதிப்பீடு

விளக்கம்

அதிமுக கட்சியைச் சேர்ந்தவர்கள் தங்களின் சட்டை பாக்கெட்களில் ஜெயலலிதா அவர்களின் புகைப்படத்தை வைத்திருப்பது வழக்கம். ஆனால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சட்டை பாக்கெட்டில் பிரதமர் மோடியின் புகைப்படம் இருப்பதாக மேற்காணும் புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது.

இதே புகைப்படம் சில ஆண்டுகளுக்கு முன்பில் இருந்தே சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரல் செய்யப்படுகிறது. தமிழக முதல்வரின் சட்டை பாக்கெட்டில் பிரதமர் மோடியின் புகைப்படம் இருப்பதாக பகிரப்படுவது போலியான ஒன்று. ஜெயலலிதா புகைப்படத்திற்கு பதிலாக மோடியின் புகைப்படம் இருப்பது போன்று மார்ஃபிங் செய்துள்ளனர்.

2017-ல் ஒகி புயல் பாதிப்பை பார்வையிட கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரவேற்கும் புகைப்படத்தில், முதல்வரின் சட்டை பையில் இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு பதிலாக மோடியின் புகைப்படத்தை அலெக்ஸ் பாண்டியன் என்பவர் மார்பிங் செய்துள்ளார். இது தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவரை போலீசார் கைது செய்ததாக செய்தியில் வெளியாகி இருக்கிறது.

2017-ல் மார்ஃபிங் செய்து பரப்பிய புகைப்படத்தை மீண்டும் மீண்டும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள். தவறான புகைப்படத்தை பகிர வேண்டாம். அரசியல், மதம் சார்ந்து தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதை நினைவில் வையுங்கள்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader