முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்த பேருந்து டெக்கரேட் செய்யப்பட்டு இருந்ததா ?

பரவிய செய்தி
முதல்வர் பஸ்ஸில் ஏறி திடீர் ஆய்வு !! திடீர் ஆய்வுல எப்படிடா டெக்கரேட் பன்னி வச்சீங்க ??குறிப்பு : யாரும் மாஸ்க் போடல !! முதல்வர் உட்பட !!
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேருந்தில் திடீரென ஏறி ஆய்வு செய்ததாகவும், அப்படி திடீர் ஆய்வு செய்யும் பேருந்தில் எப்படி டெக்கரேசன் செய்யப்பட்டது என்ற கேள்வி உடன் ஸ்டாலின் பேருந்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று ட்விட்டர், முகநூலில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
முதல்வர் பஸ்ஸில் ஏறி திடீர் ஆய்வு !!
திடீர் ஆய்வுல எப்படிடா டெக்கரேட் பன்னி வச்சீங்க ??? pic.twitter.com/oxw4esls4Z
— 🚩 என் தேசம் இந்தியா 🇮🇳 (@VjiayanS) October 24, 2021
முதல்வர் பஸ்ஸில் ஏறி திடீர் ஆய்வு !!
திடீர் ஆய்வுல எப்படிடா டெக்கரேட் பன்னி வச்சீங்க ???
கரும்பு காட்டில் சிமெண்ட் ரோடு போட்ட மாதிரி pic.twitter.com/jMrHXmu3lk
— Netrikan Tv🚩 (@netrikantv) October 25, 2021
உண்மை என்ன ?
அக்டோபர் 23-ம் தேதி சென்னை கண்ணகி நகர் பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பேருந்தில் ஏறி திடீர் ஆய்வு செய்ததாகவும், மக்களிடம் குறைகளை கேட்டதாகவும் வீடியோ உடன் கூடிய செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
முதல்வர் ஸ்டாலின் பேருந்தில் இருக்கும் போது மாஸ்க் அணிந்து இருப்பதையும், சுற்றி உள்ளவர்களும் மாஸ்க் அணிந்து இருப்பதை காணலாம்.
வைரல் செய்யப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2019-ம் ஆண்டு அக்டோபர் 13-ம் தேதி dtnext இணையதளத்தில் இதே புகைப்படம் வெளியாகி இருக்கிறது. விக்கிரவாண்டி தேர்தலுக்கு பேருந்தில் வாக்காளர்களுடன் மு.க.ஸ்டாலின் உரையாடியதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முடிவு :
நம் தேடலில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் திடீர் பேருந்து ஆய்வில் எப்படி டெக்கரேசன் செய்யப்பட்டது என வைரல் செய்யப்படும் புகைப்படம் சமீபத்திய பேருந்து ஆய்வின் போது எடுக்கப்பட்டது அல்ல. இந்த புகைப்படம் 2019-ல் விக்கிரவாண்டி தேர்தலின் போது எடுக்கப்பட்டது என அறிய முடிகிறது.