ரயில் மூலம் நிலக்கரியை அனுப்புவதாக பழைய வீடியோவை பகிர்ந்த பிரகாஷ் ஜவடேகர் !

பரவிய செய்தி
மின் நிலையங்களுக்கு நிலக்கரியை வழங்குவதற்காக 4 கி.மீ நீளமுள்ள ரேக் ரயில் 4 எஞ்சின் உடன் போர்க்கால அடிப்படையில் இயக்கப்படுகிறது. இதுவே மோடி அரசு, புதிய இந்தியா.
மதிப்பீடு
விளக்கம்
நிலக்கரி தட்டுப்பாடு சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் அனல் மின் நிலையங்களில் போதுமான நிலக்கரி இருப்பு இல்லாமல் மின் உற்பத்தி பாதிக்கும் நிலை உருவாக உள்ளதாகவும், 4 நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி இருப்பு உள்ளதாக செய்திகளில் வெளியாகி வந்தன.
இந்நிலையில், அக்டோபர் 20 தேதி முன்னாள் ஒன்றிய அமைச்சரும், பாஜக எம்பியுமான பிரகாஷ் ஜவடேகர், ” மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை வழங்க 4 கி.மீ நீளமுள்ள ரேக் ரயில் மூலம் போர்க்கால அடிப்படையில் இயக்கப்படுவதாக ” ட்விட்டரில் நிலக்கரியை ஏற்றிச் செல்லும் ரயிலின் வீடியோவை பகிர்ந்து இருக்கிறார்.
4 km long Rack train with 4 engines being run on war footing basis to supply coal to power plants.
This is #Modigovt & @narendramodi ji’s #NewIndia !@PMOIndia @RailMinIndia @CoalMinistry @BJP4India @BJP4Maharashtra pic.twitter.com/zx3S1u2fw6— Prakash Javadekar (@PrakashJavdekar) October 20, 2021
240 wagon load of coal.4 km long rack train with 4 engines being run on war footing bases to supply coal to power plants.#CoalShortageInIndia pic.twitter.com/L3ocQHukPe
Advertisement— Karthikeyan Indian கார்த்திகேயன் இந்தியர் (@Karth1keyan) October 21, 2021
எம்.பி பிரகாஷ் ஜவடேகர் பகிர்ந்த வீடியோவை வைத்து நியூஸ்18 ஆங்கில இணையதளத்தில் செய்தியும் வெளியாகி இருக்கிறது. தற்போது இந்த வீடியோ இந்திய அளவில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
உண்மை என்ன ?
பிரகாஷ் ஜவடேகர் பகிர்ந்த ரயில் பெட்டிகளில் நிலக்கரியை ஏற்றிச் செல்லும் வீடியோ ஆனது தற்போது நிலக்கரி தட்டுப்பாடு நேரத்தில் எடுக்கப்பட்டது அல்ல. 2021 ஜனவரி மாதம் இதே வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது .
ஜனவரி 6-ம் தேதி ஐஆர்டிஎஸ் அமைப்பின் ட்விட்டர் பக்கத்தில், பிலாஸ்பூர் மற்றும் கோர்பாவில் முதல் முறையாக 4 நிரப்பப்பட்ட சரக்கு ரயில் இணைக்கப்பட்டது. 500 ட்ரக்குகளுக்கு இணையான 16,000 டன் நிலக்கரியை ஏற்றிக் கொண்டு கோர்பாவில் இருந்து பிலாய் வரை பயணித்தது ” என 2 நிமிட வீடியோ வெளியாகி இருக்கிறது.
VASUKI, 4 loaded goods train connected for the first time in Korba, Bilaspur Division.
Carrying 16000 tonn of coal equivalent to 500 trucks, it ran from Korba to Bhilai.
Commendable job done by the entire Operations team led by Shri Ravish Kumar Singh #IRTS#IRTSMovingIndia pic.twitter.com/08RUn1F6aj
— IRTS Association (@IRTSassociation) January 6, 2021
இந்திய ரயில்வே போக்குவரத்து சேவை(ஐஆர்டிஎஸ்) என்பது ரயில்வே அமைக்கத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது. ஐஆர்டிஎஸ் அசோசியேசன் நிலக்கரியுடன் ரயில் பயணிக்கும் இதே 2 நிமிட வீடியோவை ட்வீட் செய்து இருக்கிறது.
Another feather in its cap:
After successful running of ‘SHESHNAG’ now, Bilaspur Division of SECR operated ‘SUPER SHESHNAG’- First ever long haul of 4 loaded trains from Korba with total load of 20906 tonnes. pic.twitter.com/fjihbjzmNM
— Ministry of Railways (@RailMinIndia) January 6, 2021
மேலும், 2021 ஜனவரி 6-ம் தேதி 2.19 நிமிடங்கள் நீளமுள்ள வீடியோவை ரயில்வே அமைச்சகமும் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், மின் நிலையங்களுக்கு நிலக்கரியை வழங்குவதற்காக 4 கி.மீ நீளமுள்ள ரேக் ரயில் 4 எஞ்சின் உடன் போர்க்கால அடிப்படையில் இயக்கப்படுகிறது என பாஜக எம்பியும், முன்னாள் அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர் ட்விட்டரில் பகிர்ந்த வீடியோ சமீபத்தில் எடுக்கப்பட்டது அல்ல, கடந்த ஜனவரி மாதம் எடுக்கப்பட்டது என அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.