கோவையில் முன்னாள் எம்பியின் கணவர் அட்டூழியம் எனப் பரவும் பழைய செய்தியின் வீடியோ!

பரவிய செய்தி
கோவையில் முன்னாள் எம்பியின் கணவர் தனியார் மகளிர் விடுதி நிர்வாகியிடம்.. தனக்கு ஒரு பெண் வேண்டும் என கேட்டு மிரட்டல்! காவல் நிலையத்தில் வழக்கு பதிய மறுப்பு!!
மதிப்பீடு
விளக்கம்
கோவையில் முன்னாள் எம்பியின் கணவர் தனியார் பெண்கள் விடுதியின் உரிமையாளரிடம் தனக்கு ஒரு பெண் வேண்டும் என மிரட்டல் விடுவதாக கூறி விடுதியின் உரிமையாளர் காவல் நிலையத்தின் வெளியே ஊடகங்களுக்கு பேட்டி அளித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன?
இதுகுறித்து தேடிய போது, 2019 செப்டம்பர் 13-ம் தேதி நியூஸ் 18-ல் முன்னாள் எம்பியின் கணவர் குறித்த செய்தி வெளியாகி இருக்கிறது.
அதில், ” ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப் பாளையத்தில் தனியார் விடுதியின் பெண் உரிமையாளரிடம் திருப்பூர் முன்னாள் எம்பி சத்தியபாமாவின் கணவர் வாசு உல்லாசத்திற்கு பெண் கேட்டு மிரட்டும் ஆடியோ வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர் புகாரளிக்க முன்வந்தும் போலிசார் புகார் பதிவு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது ” என செய்தியில் வெளியாகி இருக்கிறது.
2018-ல் அதிமுகவின் முன்னாள் எம்பி சத்தியபாமாவை அவரது கணவர் வாசு கத்தியால் தாக்கி கொலை செய்ய முயற்சித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். 2016-ல் இருந்து சத்தியபாமாவும், அவரது கணவரும் பிரிந்து வாழ்கின்றனர்.
முடிவு :
நம் தேடலில், கோவையில் முன்னாள் எம்பியின் கணவர் தனியார் மகளிர் விடுதி நிர்வாகியிடம் தனக்கு ஒரு பெண் வேண்டும் என கேட்டு மிரட்டல் விடுவதாக பரவும் வீடியோ 2019-ல் வெளியான பழைய செய்தி என அறிய முடிகிறது.