கோவை மாநகராட்சியில் தோற்றவரை வெற்றி பெற்றதாகப் பரப்பும் பாஜகவினர் !

பரவிய செய்தி

கோவை மாநகராட்சி 2 வது வார்டில் பாஜக வேட்பாளர் திருமதி.வத்சலா அபார வெற்றி.

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

தமிழ்நாட்டின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் திருமதி. வத்சலா அபார வெற்றி பெற்றதாக ஓர் பதிவு சமூக வலைதளங்களில் பாஜகவினரால் பகிரப்பட்டு வருகிறது .

தமிழக பாஜகவின் சிவகங்கை மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவின் செயலாளர் பிள்ளையப்பன் இப்பதிவை வெளியிட்டு இருந்தார்.

உண்மை என்ன ?

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் முடிவுகளில், கோவை மாநகராட்சி வார்டுகளில் பாஜக ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யவில்லை என இடம்பெற்றுள்ளது. கோவை மாநகராட்சியின் 2-ம் வார்டில் வெற்றிப் பெற்றது திமுக வேட்பாளர் திருமதி அ.புஷ்பமணி என தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.

இதுமட்டுமின்றி, கோவை மாவட்டத்தில் பாஜக பெற்ற 1 நகராட்சி மற்றும் 5 பேரூராட்சி வார்டுகளிலும் அந்த பெயர் இடம்பெற்றவில்லை. கோவை மாநகராட்சியின் 2-ம் வார்டில் பாஜக வேட்பாளர் திருமதி. வத்சலா 2386 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்து இருக்கிறார்.

Archive link

மேலும் படிக்க : தமிழகத்தில் பாஜக வளர்ந்து விட்டதா ? உள்ளாட்சித் தேர்தலின் உண்மை ரிப்போர்ட் !

முடிவு :

நம் தேடலில், கோவை மாநகராட்சியின் 2-ம் வார்டில் பாஜக வேட்பாளர் திருமதி. வத்சலா வெற்றி பெற்றதாக பரவும் தகவல் தவறானது. அவர் பெற்றி பெறவில்லை. அந்த வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்று உள்ளார் என அறிய முடிகிறது

Please complete the required fields.




ஆதாரம்

https://tnsec.tn.nic.in/

Back to top button
loader