This article is from Nov 19, 2018

Colgate டூத் பேஸ்ட் கேன்சரை உண்டாகுகிறதா ?

பரவிய செய்தி

மதிப்பீடு

சுருக்கம்

Chemical Research in Toxicology என்ற அமெரிக்க இதழில் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில், நாளமில்லா சுரப்பிகளை தடை செய்யும் வேதிப்பொருள் triclosan மற்றும் octylphenol மூலம் மார்பகப் புற்றுநோய் செல்கள் அதிகரிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், Triclosan பயன்படுத்தும் அளவு பாதுகாப்பான அளவுடன் இருப்பதாகவும், அதற்கு FDA அனுமதி அளித்து உள்ளதாகவும் colgate நிறுவனம் தெரிவித்து உள்ளது.

விளக்கம்

சமீபத்தில் அமெரிக்க ஆய்வில் பிரபல நிறுவனமான colgate-ன் டூத் பேஸ்டில்(பற்பசை) புற்றுநோய் செல்களை அதிகரிக்கும் வேதிப்பொருளான triclosan அதிகம் இருப்பதாகவும், இது உடல் நலத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என செய்தித்தாளில் வெளியானது வைரலாகி வருகிறது. ஆய்வின் தகவலும், colgate-ன் விளக்கமும் பற்றி விரிவாக காண்போம்.

Colgate :

1937-ம் ஆண்டில் colgate – Palmolive(india) இந்தியாவில் டூத் பேஸ்ட் விற்பனையைத் துவங்கியது. 1976-ம் ஆண்டில் குழந்தைகளை மையமாகக் கொண்டு இந்தியா முழுவதும் பள்ளியில் நடத்தப்பட்ட “ bright smile bright future “ நிகழ்வுகளில் இருந்து பிரபலமானது. இதைத் தவிர மருத்துவர்கள் பரிந்துரையில் சிறந்தது, உங்கள் டூத் பேஸ்டில் உப்பு இருக்கா என்ற தற்போதைய விளம்பரங்கள் மூலம் இந்திய விற்பனை சந்தையில் அதன் பிராண்ட் பெருமளவில் லாபம் ஈட்டுகிறது. அத்தகைய நிறுவனத்தின் டூத் பேஸ்டில் உள்ள ரசாயனம் தீங்கு விளைவிப்பதாக குற்றச்சாட்டுகளைச் சந்தித்து வருகிறது.

Triclosan :

ட்ரைகுளோசன்(Triclosan) என்ற ரசாயனம் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு காரணமாக பல அழகு சாதனப் பொருட்கள் மற்றும் சில டூத் பேஸ்ட் தயாரிப்புகள் என ஆயிரக்கணக்கான தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. பல்லீறுப் பாதிப்புகளைத் தடுக்கும் என கூறி பேஸ்ட்களில் பயன்படுத்தப்படுகிறது.

  • 2009-ம் ஆண்டு மே மாதம் “ national industrial chemicals notification and assessment scheme(NICNAS)-ன் சுகாதாரத்துறை Triclosan முழுவதும் ஆபத்தான மதிப்பீடு என தெரிவித்தது.
  • Advisory committee of chemical scheduling (ACCS)-ன் படி ஆஸ்திரேலியாவில் அழகு சாதனப் பொருட்களில் Triclosan-ன் பங்கு 0.3 சதவீதம் என குறிப்பிட்டு உள்ளனர்.

Chemical Research in Toxicology ஆய்வு :

2014-ல் Chemical Research in Toxicology எனும் அமெரிக்காவின் கெமிக்கல் சொசைட்டி இதழில் வெளியான கட்டுரையில், “ நாளமில்லா சுரப்பிகளை தடை செய்யும் வேதிப்பொருள் triclosan மற்றும் octylphenol மூலம் மார்பகப் புற்றுநோய் செல்கள் அதிகரிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது “.

இதற்கான கெமிக்கல் ஃபார்ம்ஸ் பற்றிய விளக்கத்தையும் தெளிவாக கட்டுரையில் விளக்கியுள்ளனர்.

பிற ஆய்வுகள் :

கலிபோர்னியாவின் Proceedings of the national academy of science பத்திரிகையில் “ The commonly used antimicrobial additive is a liver Tumor promoter “ என்ற தலைப்பில், triclosan பற்றி எலிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் கல்லீரல் புற்றுநோயின் வளர்ச்சியில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது  என குறிப்பிட்டுள்ளனர்.

The conversation இணைய இதழில், University of Massachusetts Amherst உள்ள பரிசோதனைக் கூடத்தில் 13 பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உடன் இணைந்து நடத்திய ஆய்வில், triclosan ரசாயனம் உடநலம் சார்ந்த ஆபத்தை ஏற்படுத்தும். “ மிகமுக்கியமாக குடலில் எரிச்சல் அழற்சி மற்றும் குடலில் மைக்ரோபயோட்டாவின் மாற்றத்தின் மூலம் குடல் புற்றுநோய் வளர்ச்சியை அதிகரிக்கும் “ என குறிப்பிட்டுள்ளனர்.

Colgate-ல் ட்ரைகுளோசன் :

பல ஆண்டுகளாக colgate டூத் பேஸ்ட் மூலப் பொருட்களில் triclosan வேதிப்பொருள் கலந்து உள்ளது. triclosan  ரசாயனத்தின் அளவை பொறுத்தே அதன் பாதிப்புகள் உள்ளன. பல தயாரிப்புகளில் triclosan இருப்பதால் தடை செய்துள்ளனர்.  ஆனால், 0.3 சதவீதம் அளவிற்கு Triclosan இருந்தால் பாதுகாப்பான அளவு என Food and drug association என colgate-க்கு FDA அனுமதி அளித்து உள்ளதாக colgate தெரிவித்து உள்ளது.

1997 ஆம் ஆண்டிலேயே triclosan அனுமதியைப் பெற்று விட்டதாகவும், FDA-வின் உண்மையான அறிக்கை 100 Toxicology க்கு மேலானது என்றும், ஒவ்வொரு ஆண்டும் அதைப் பற்றி நிறுவனம் கண்காணிக்கிறது மற்றும் பாதுகாப்பை அதிகரிக்கிறது என்றும் colgate நிறுவனம் கூறியுள்ளது.

ட்ரைகுளோசன் ரசாயனம் புற்றுநோய் செல்களை அதிகரிக்கும் என பல ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. அத்தகையை ரசாயனத்தை பயன்படுத்தும் அளவு 0.3% க்கு மேல் சென்றால் பக்க விளைவுகளையும், பாதிப்புகளையும் பெற நேரிடும்.

இன்றைய உலகில் நாம் தினந்தோறும் பயன்படுத்தும் பொருட்களில் ரசாயனங்களின் பயன்பாடு அதிகளவில் இருப்பதை அனைவரும் அறிவோம். இருப்பினும், ரசாயனங்கள் குறிப்பிட்ட அளவில் இருந்தால் பாதுகாப்பானது என்ற நம்பிக்கையில் அதைப் பெரிதுப்படுத்துவதில்லை.

இயற்கையாகப் பயன்படுத்தி வந்த பல் சுத்தப்படுத்திகளால் பாதிப்புகள் ஏற்படும், நவீன முறை , மென்மையான பயன்பாடு என கூறி விற்பனைக்கு வந்த டூத் பேஸ்ட்களில் உடலுக்கு ஆபத்தான ரசாயனங்கள் இருப்பதை ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன.

நாம் ரசாயனத்தை பயன்படுத்துகிறோம் என தெரிந்து கொண்டோம். முடிந்தால் இயற்கையான முறையில் வாழ்க்கையை வாழ முயற்சி செய்வோம் அல்லது ரசாயனங்கள் பற்றியும், அதன் விளைவுகள் பற்றியும் அறிந்து பயன்படுத்துதல் சிறந்தது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader