கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து தேசியக் கொடியை ஏற்றிய கலெக்டர் எனப் பரவும் ஜம்மு காஷ்மீர் வீடியோ !

பரவிய செய்தி
கவனமாக இரு. இந்துக்களின் ஒரு தவறான வாக்கு இந்தியாவை நமது தேசத்தின் இஸ்லாமியமயமாக்கலை நோக்கி தள்ளும். ஏற்கனவே கர்நாடகாவில் நடக்கிறது. த்வஜ வந்தனாவின் போது பர்காவில் பெண் கலெக்டர். பரேட் பரிசோதனையின் போது கூட அவள் அணிந்திருக்கும் ஹிஜாப் ஐ பார்க்க. பிரான்சில் இப்படிதான் தொடங்கியது..
மதிப்பீடு
விளக்கம்
கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து கொண்டு கலெக்டர் ஒருவர் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்துவதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வலது சாரிகளால் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது. மேலும் அந்த வீடியோவில் அந்தப் பெண் ஹிஜாப் அணிந்து அணிவகுப்பு வண்டியில் செல்வதையும் காண முடிந்தது.
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ கர்நாடகாவில் எடுக்கப்பட்டது அல்ல என்பதை அறிய முடிந்தது.
பரவி வரும் வீடியோவின் முழுப்பகுதி Fast News ஊடகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், “சுதந்திர தினம் 2023: ஒரே துணைத் தலைவரான சைமா பர்வீன், கிஷ்த்வார் சௌகான் மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றினார். மேலும் வரலாற்றில் முதல் முறையாக கிஷ்த்வாரின் துணைத் தலைவர் சைமா பர்வீன் லோன் பொது மக்களிடம் ஹிஜாப் அணிந்து உரையாற்றினார்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: கர்நாடகாவில் ஹிஜாப் உரிமைக்காக கோஷமிட்ட முஸ்கானின் லண்டன் வாழ்க்கை எனப் பரப்பப்படும் தவறான புகைப்படம் !
மேலும் படிக்க: இந்திரா காந்தி ஹிஜாப் அணிந்து இருப்பதாக வதந்தி பரப்பும் பாஜகவினர் !