ராஜீவ் காந்தி சிலையை கம்யூனிஸ்ட்டுகள் உடைத்ததாக பரவும் வதந்தி.

பரவிய செய்தி

2008-ல் திரிபுராவில் அமைந்திருந்த முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி சிலையை கம்யூனிஸ்ட்டுகள் உடைக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம். லெனின் சிலையை உடைப்பதற்கு அவர்களே முன்னுதாரணமாக இருந்துள்ளனர்.

மதிப்பீடு

சுருக்கம்

2013-ல் ஆந்திரா மாநிலம் இரண்டாக பிரியக்கூடாது என போராட்டம் நடத்தியவர்கள், மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ராஜீவ் காந்தியின் சிலையை உடைக்கும் போது எடுக்கப்பட்ட படம் தான் இது.

விளக்கம்

சமீபத்தில் திரிபுரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியை இழந்தது. தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்ற பிறகு தெற்கு திரிபுரா நகரில் கம்யூனிஸ்ட்டுகளின் வெற்றியின் அடையாளமாக கருதப்படும் லெனின் சிலை பாஜக ஆதரவாளர்களால் உடைக்கப்பட்டது.

Advertisement

இதற்கு நாடெங்கிலும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்த தருணத்தில், கம்யூனிஸ்ட்டுகள் 2008-ல் திரிபுராவில் அமைந்திருந்த முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி சிலையை உடைக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது. சிலை உடைப்பிற்கு அவர்களே முன்னுதாரணமாகி உள்ளனர் என்றுக் கூறி சமூக வலைத்தளங்களில் தவறான செய்திகள் பகிரப்படுகின்றன.

சமூக வலைத்தளங்களில் ராஜீவ் காந்தியின் சிலையை கம்யூனிஸ்ட்டுகள் உடைப்பதாகக் கூறி பகிர்ந்து வருபவர்கள் வலதுசாரி சிந்தனை உடையவர்கள் என்பதை அவர்களின் செயல்பாடுகளில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

காரணம், லெனின் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்தை திசை திருப்பி, கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் காங்கிரஸ் இடையேயான மோதலை உருவாக்க இவ்வாறான தவறான தகவல்களை பதிவிட்டு வருகின்றனர்.

2013 ஆம் ஆண்டில் ஆந்திரா மாநிலம் இரண்டாக பிரிவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆந்திராவின் ஒரு பகுதி மக்கள் மாநிலப் பிரிவிற்கு மத்திய அரசு தான் காரணம் என்று எண்ணினர். அதனால், தற்போதைய தெலுங்கானா மாநிலத்தின் அனந்தபூர் பகுதியில் அமைந்திருந்த முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி சிலையை உடைத்தனர். 2014-ல் ஆந்திர மாநிலம் இரண்டாக உடைந்த போது நிகழ்ந்த பல்வேறு போராட்டங்கள் மத்திய காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியது.

Advertisement

மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜீவ் காந்தியின் சிலை உடைக்கப்படும் போது Deccan Chronicle செய்தி நிறுவனத்தால் எடுக்கப்பட்ட இப்படத்தின் கதையை திரித்து கம்யூனிஸ்ட்டுகள் உடைத்ததாக வதந்தியை பரப்பி வருகின்றனர்.

நீண்ட காலமாக வலதுசாரி மற்றும் இடதுசாரிகளுக்கு இடையே இருந்த கருத்து மோதல்கள் தற்போது வெறுப்பின் உச்சத்தை அடைந்து வன்முறையில் வந்து நிற்கிறது. இந்நிலையில், வலதுசாரி ஆதரவாளர்கள் கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் காங்கிரஸ் இடையே மோதலை உருவாக்க எண்ணி தவறான செய்திகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button