This article is from Apr 23, 2019

ஒரே பாட்டியுடன் காங்கிரஸ் கட்சியினர் புகைப்படங்கள் எடுத்துள்ளனரா ?

பரவிய செய்தி

காங்கிரஸ் காரனுங்க இந்த பாட்டியை வாடகைக்கு எடுத்து இருக்கானுங்களோ எல்லாம் இடத்திலும் ஒரே பாட்டி

மதிப்பீடு

சுருக்கம்

படங்களை தெளிவாக ஆராய்ந்த போது வெவ்வேறு நபர் எனத்தெரிய வந்தது. மேலும் அதில் ஒரு பாஜக பிரமுகர் படமும் சேர்த்து பகிரப்படுகிறது.

விளக்கம்

காங்கிரஸ் கட்சியினர் வயதான பெண் ஒருவரை பணம் கொடுத்து அவருடன் அனைத்து இடங்களிலும் புகைப்படம் எடுத்து இருப்பதாக சில புகைப்படங்களுடன் சமூகவலைத்தளங்களில் பரப்பப்படுகின்றன.

முதலில் 3 படங்களுடன் பரவிய செய்தி இப்பொது கூடுதலாக பிரியங்கா காந்தி படத்தையும் சேர்த்து பகிரப்படுகின்றன. அந்த படங்களை எடுத்து தனி தனியாக எடுத்து தேடி பார்க்கையில் கிடைத்த தகவல்களை பார்க்கலாம் .


முதல் படம் பிரியங்கா காந்தி கேரளா சென்று இருந்த போது  எடுக்கப்பட்டதாக சாவ்பால்  என்பவர் தனது ட்விட்டர்  பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இரண்டாவதாக உள்ள புகைப்படத்தை சசிதரூர் தனது ட்விட்டர் பக்கத்தில் 13 ஏப்ரல் 2019-இல் அந்த பெண் என் கால்களை தொட முயற்சித்தபோது  நான் தடுத்து அதற்கு பதிலாக அவரை  அணைத்து கொண்டேன் என குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்.

மூன்றாவது படம் ராகுல் காந்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வெள்ளம்  பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்ற போது எடுத்ததாக  காங்கிரஸ் அதிகாரப்பூர்வ பக்கத்தில்  9 டிசம்பர் 2015-இல் பதிவிடப்பட்டுள்ளது.

நான்காவது படத்தினை தேடிப்பார்க்கையில் புகைப்படத்தில் இருப்பது காங்கிரஸ் பிரமுகர் இல்லை என்பது தெரியவந்தது. மேலும் அவர் கேரளா பாஜக பொதுச்செயலாளர் சுரேந்தர் என்பது கூடுதல் தகவல். இந்தப்படம் எந்த மீடியாவும் சுரேந்தனின் இந்த உருக்கமான பிரச்சார படத்தினை வெளியிடாது. அவரது வெற்றி வாய்ப்பு நன்றாக தெரிகிறது என பகிரப்பட்டுள்ளது.

நான்கு படங்களிலும் உள்ள பெண்களை எடுத்து பார்க்கையில் வெவ்வேறு நபர்கள் என்பது தெளிவாக தெரிகிறது. அவர்களின் தலைமுடியும் பற்களின் வரிசையும் கவனித்தால் வித்தியாசமாக இருப்பது உறுதியாகியது.

இதிலிருந்து படங்களில் இருப்பது ஒரே மூதாட்டி அல்ல என்பதும் அவ்வாறு பரப்பப்படும் செய்தி முற்றிலும் போலியான செய்தி என்பது தெளிவாகிறது.

 

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader