காங்கிரஸ் எம்எல்ஏ பூங்காவில் மான்களை வேட்டையாடுவதாக பரவும் வதந்தி வீடியோ !

பரவிய செய்தி

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அனில் உபாத்யாய் பூங்காவில் மான்களை வேட்டையாட கற்றுக்கொண்டிருக்கிறார். இதை வைரலாக்குங்கள்.

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அனில் உபாத்யாய் என்பவர் பூங்காவில் மான்களை வேட்டையாடிக் கற்றுக் கொள்வதாக 2 நிமிட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உண்மை என்ன ? 

கடந்த 2019-ல் பாஜகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் மானை வேட்டையாடிக் கொல்வதாக இதே வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. அப்போதே, வைரல் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து விரிவான கட்டுரையை வெளியிட்டு இருந்தோம்.

மேலும் படிக்க : பாஜக எம்.எல்.ஏ மானை வேட்டையாடுவதாக வைரலாகும் வீடியோ உண்மையா ?

வைரலாகும் வீடியோ இந்தியாவைச் சேர்ந்தது அல்ல. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பாக பங்களாதேஷ் நாட்டில் பேசுப் பொருளான வீடியோவாகும்.

2015 ஜூலை 12-ம் தேதி பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த ” The daily star ” எனும் செய்தி இணையதளத்தில் ” Who is the beast? ” என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் பங்களாதேஷ் நாட்டில் பிறந்த ஆஸ்திரேலியரான மொய்ன் உதின் தன்னுடைய சொந்த பண்ணையில் மான்களை வேட்டையாடி மகிழ்வதாக வெளியிட்ட வீடியோ குறித்து கடுமையாக கேள்வி எழுப்பி இருந்தன. இதற்கு, மொய்ன் உதின் பதிலும் அளித்து இருந்தார்.

முடிவு : 

நம் தேடலில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அனில் உபாத்யாய் பூங்காவில் மான்களை வேட்டையாட கற்றுக்கொண்டிருக்கிறார் என பரவும் வீடியோ தவறானது. அது பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தது என அறிய முடிகிறது.

Please complete the required fields.
Back to top button