This article is from Feb 15, 2022

அமித்ஷா ‘காங்கிரஸ் பார்ட்டி’ என்றதும் கூட்டத்தில் “ஜிந்தாபாத் ” எனக் கோசமிட்டார்களா ?

பரவிய செய்தி

வீடியோவை நன்றாக கவனியுங்கள். அமித்ஷா : காங்கிரஸ் பார்ட்டி , மக்கள் : ஜிந்தாபாத், ஜிந்தாபாத்.

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா தேர்தல் பிரச்சாரத்தின் போது ” காங்கிரஸ் பார்ட்டி ” எனப் பேச தொடங்கிய போது கூட்டத்தில் இருந்த மக்கள் “ஜிந்தாபாத் ஜிந்தாபாத் ” என கோசமிடுவதாக 8 நொடிகள் கொண்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Twitter link | Archive link 

பிப்ரவரி 13-ம் தேதி சத்தீஸ்கர் மாநில இந்திய தேசிய காங்கிரஸ் உடைய அதிகாரப்பூர்வ ட்விட்டரில் பக்கத்திலும் அமித்ஷாவின் வீடியோ பகிரப்பட்டு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டரில் பக்கத்தில் இவ்வீடியோ பதிவிடப்பட்டதால் பலரும் ட்ரோல் செய்து இவ்வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள்.

உண்மை என்ன ? 

உத்தரகாண்ட் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்காக பிப்ரவரி 12-ம் தேதி ராய்ப்பூர் பகுதியில் நடைபெற்ற பாஜகவின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் முழு உரையும் பாஜகவின் யூடியூப் சேனலில் வெளியாகி இருக்கிறது.

அமித்ஷாவின் உரையின் போது, ” காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் பெயரை அறிவிக்கவில்லை, அவருக்கு விரும்பிய இடத்தில் போட்டியிட சீட்டு கொடுக்கவில்லை. ஆனால், ராவத்ஜி-க்கு தோற்கும் பழக்கம் இருப்பதால் அது இருக்கட்டும். இது காங்கிரசுக்கு தெரியும், ஆகையால் அவர்கள் புதிதாக எதையும் செய்ய வேண்டியதில்லை(அப்போது மக்கள் சிரிப்பதை கேட்கலாம்). ஆனால், நண்பர்களே, இந்த காங்கிரஸ் கட்சி (மக்கள் முழக்கங்களை எழுப்புவதால் இடைநிறுத்தப்பட்டது).. இந்த காங்கிரஸ் கட்சி ஒருபோதும் தேவபூமியை வளர்க்காது ” எனப் பேசி உள்ளார்.

வீடியோவில் 11:24வது நிமிடத்தில் அமித்ஷா காங்கிரஸ் பார்ட்டி எனக் கூறும் பொது மக்கள் எழுப்பியது ஜிந்தாபாத் அல்ல, ” முர்தாபாத்” (இறந்த).

மேலும், பாஜகவின் பிரச்சாரத்தில் அமித்ஷா பேசும் போது காங்கிரஸ் ஜிந்தாபாத் என கோசம் எழுப்பப்பட்டு இருந்தால் இந்திய அளவில் செய்திகளில் வெளியாகி இருக்கும். ஆனால், அதுதொடர்பாக எந்தவொரு செய்தியும் வெளியாகவில்லை.

முடிவு : 

நம் தேடலில், உத்தரகாண்டில் பாஜகவின் பிரச்சாரத்தில் அமித்ஷா காங்கிரஸ் பார்ட்டி எனப் பேசும் போது மக்கள் ஜிந்தாபாத் எனக் கூறியதாக பரவும் வீடியோ தவறானது, அது ஜிந்தாபாத் இல்லை, முர்தாபாத் என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader