ஸ்மிருதி இரானியை காங்கிரஸ் இளைஞரணித் தலைவர் ஆபாசமாகப் பேசியதாக எடிட் வீடியோவைப் பரப்பிய பாஜகவின் அமித் மாள்வியா !

பரவிய செய்தி
இந்த அநாகரிகமான நபர் இந்திய இளைஞர் காங்கிரசின் தலைவராக உள்ளார். காதலியாக படுக்கையறையில் (डार्लिंग बना कर बेडरूम में) என ராகுல் காந்தியை அமேதியில் தோற்கடித்ததற்காக ஒரு பெண் அமைச்சரைக் குறிப்பிடும் போது இப்படி பேசுகிறார். விரக்தியடைந்த காங்கிரஸ் பொருத்தமற்ற பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறது.
மதிப்பீடு
விளக்கம்
ராகுல் காந்தியின் எம்.பி தகுதி நீக்கம் அறிவிப்பு வெளியிடப்பட்ட பிறகு நாடு முழுவதிலும் அரசியல் பரபரப்பு காட்சிகள் அரங்கேறி வருகிறது. இதற்கிடையில், இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீனிவாஸ் மேடையில் பேசுகையில், பாஜக அமைச்சர் ஸ்மிருதி இரானியை குறிப்பிட்டு ஆபாசமாக பேசியதாக வீடியோ ஒன்றை பாஜகவின் தேசிய அளவில் பரப்பி வருகின்றனர். இதை பாஜக ஐடி விங் தலைவர் அமித் மாள்வியா, கர்நாடகா பாஜகவின் எம்பி தேஜஸ்வி சூர்யா உள்ளிட்டோர் பதிவிட்டு உள்ளனர்.
National President of Youth Wing of @INCIndia makes absolutely deplorable & sexist remarks on self-made woman leader who has come up through sheer hard work and merit.
Where is @priyankagandhi’s ‘Ladki Hoon, Lad Sakti Hoon’ gang now?
Not even a cursory condemnation? https://t.co/qlcn0F0kig
— Tejasvi Surya (@Tejasvi_Surya) March 27, 2023
உண்மை என்ன ?
மார்ச் 27ம் தேதி இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிவி ஸ்ரீனிவாஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், எனது முழுப் பேச்சையும் கேட்கவும். 2014க்கு முன்பு நீங்கள் கூறியதை தான் நான் மேற்கோள்காட்டினேன் ” என 36 நொடிகள் கொண்ட வீடியோவைப் பதிவிட்டு இருக்கிறார்.
संघी नही सुधरेंगे,
आधा अधूरा नही पूरा बयान चलाओ,मैंने 2014 के पहले दिए जाने वाले आप लोगों के बयान को ही Quote किया है
जो ₹400 LPG सिलिंडर वाली ‘महंगाई’ आप लोगों को ‘डायन’ नजर आती थी,
आज आप लोगों ने उसी ‘डायन’ महंगाई को ₹1100 LPG के रूप में ‘डार्लिंग’ बनाकर बैठाया हुआ है। pic.twitter.com/e4sxstLL95
— Srinivas BV (@srinivasiyc) March 27, 2023
முழுமையான வீடியோவில், பாஜகவினால் வேலையில்லா திண்டாட்டம் ஏற்படுகிறது. தொழிலாளர்கள், உழைப்பாளிகள் எப்படி வாழ்கிறார்கள் என்று அவர்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா ? அவர்கள் இதைப் பற்றி சிந்தித்ததில்லை. பணவீக்கத்துக்கு பாஜகதான் காரணம். 2014ல் பணவீக்கத்தை ஒரு சூனியக்காரி என்றும், அதை குறைப்போம் என்றும் கூறினர். இதை ஸ்மிருதி இரானிக்கு சொல்ல விரும்புகிறேன். அவர் காது கேளாமலும், ஊமையாகவும் மாறி விட்டார். நீங்கள் பணவீக்கம் எனும் சூனியக்காரியை செல்லமாக மாற்றிப் படுக்கையறையில் வசதியாக உட்கார வைத்துள்ளீர்கள் எனப் பேசி உள்ளார்.
பிவி ஸ்ரீனிவாஸ் பேசிய வீடியோவின் தொடக்கத்தில் இடம்பெற்ற வேலையில்லா திண்டாட்டம் மற்றும் 2014ல் பாஜக அளித்த வாக்குறுதி பற்றிய பகுதியை நீக்கி விட்டு பணவீக்கத்தை படுக்கையறையில் வசதியாக அமர வைத்து உள்ளீர்கள் எனப் பேசிய பகுதியை மட்டும் எடிட் செய்து பரப்பி உள்ளனர்.
இதற்கு முன்பாக 2023 பிப்ரவரியில் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனும் பணவீக்கம் மற்றும் பாஜக குறித்து இதேபோன்ற கருத்தை பேசி இருந்தார். முன்பு பணவீக்கத்தை “தாயன்” (சூனியக்காரி) என பாஜக அழைத்தது, ஆனால் தற்போது அது அக்கட்சியின் “பவுஜாய்” (மைத்துனி) ஆகிவிட்டது போல் தெரிகிறது எனத் தெரிவித்து இருந்தார்.
#WATCH | When price of a gas cylinder was Rs 400, she (Smriti Irani) used to talk about ‘mehangayi daayan’ & now the price has reached Rs 1100 & that ‘daayan’ has now become darling. This is what I said before. What is wrong in this?: Srinivas BV, President, Indian Youth Congress pic.twitter.com/MeS5dO5xZd
— ANI (@ANI) March 27, 2023
பி.வி.ஸ்ரீனிவாஸ் ஏஎன்ஐ செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில், ” கேஸ் சிலிண்டரின் விலை 400 ரூபாயாக இருந்த போது, அவர்(ஸ்மிருதி இரானி) ‘மெஹங்காய் தாயன்’ ( பணவீக்கம் சூனியக்காரி) எனப் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் இப்போது விலை 1100ரூபாயை எட்டியுள்ளது. அந்த ‘தாயன்’ (சூனியக்காரி) இப்போது செல்லமாகிவிட்டது. இதைத்தான் நான் முன்பே சொன்னேன். இதில் என்ன தவறு ? ” எனக் கூறி இருக்கிறார்.
மேலும் படிக்க : வயதான விவசாயி தாக்கப்படவில்லையா ?| உண்மைத்தன்மை எனப் பரப்பப்படும் பொய் பிரச்சாரம்!
முடிவு :
நம் தேடலில், இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி.வி.ஸ்ரீனிவாஸ் பாஜக அமைச்சர் ஸ்மிருதி இரானியை ஆபாசமாக பேசியதாகப் பரப்பப்படும் தகவல் தவறானது. அவர் பாஜகவின் பணவீக்கம் குறித்து பேசிய வீடியோவை எடிட் செய்து பரப்பி உள்ளனர் என்பதை அறிய முடிகிறது.