இந்த எண்கள் மூலம் கொரோனா காலர்டியூனை நிறுத்த முடிகிறதா ?

பரவிய செய்தி

அப்பாடா.. இதுக்கொரு விடிவு பிறந்திருச்சி. நீங்கள் கொரோனா காலர் டியூனை நீக்க விரும்பினால்.  *If You Want To Remove Pre- RBT (Corona Caller Tune)* Airtel – *646*224# , BSNL – UNSUB 56700 (SMS) , IDEA – STOP 155223 (SMS) , VODAFONE – CANCT 144 (SMS) , JIO – STOP 155223 (SMS) . அனைவரும் இதை பயன்படுத்தி deactive பண்ணுங்க..

Facebook link | archive link 

மதிப்பீடு

விளக்கம்

கொரோனா வைரஸ் பாதிப்பு பரவத் தொடங்கிய போது மக்களிடம் விழிப்புணர்வை கொண்டு சேர்க்க மத்திய அரசு கொரோனா வைரஸ் ” காலர் டியூனை ” அறிமுகப்படுத்தியது மற்றும் அதைச் செயல்படுத்த செல்போன் நெட்வொர்க் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, அனைத்து நிறுவனங்களும் கொரோனா விழிப்புணர்வு செய்தியை பொதுவான ” காலர் டியூனாக ” வடிவமைத்தனர்.

Advertisement
இந்நிலையில், 6 மாதங்களாக செயல்பாட்டில் இருக்கும் ” கொரோனா காலர் டியூன் ” கேட்பதை மக்கள் விரும்பவில்லை. அதை நிறுத்த வேண்டும் என்கிற மீம்ஸ் கூட சமூக வலைதளங்களில் வெளியாகின. கொரோனா காலர் டியூனை இடையில் நிறுத்த ” 1 ” போன்ற குறிப்பிட்ட எண்களை டயல் செய்தால் இடைநிறுத்தப்படும். இருப்பினும், கொரோனா காலர் டியூனை முழுமையாக நிறுத்த வழி தெரியாமல் இருந்து வந்தனர்.
தற்போது கொரோனா காலர் டியூனை முழுமையாக நீக்க விரும்பினால் ஒவ்வொரு நெட்வொர்க் சேவைக்கு குறிப்பிட்ட வழிமுறையை பின்பற்றுங்கள் என கீழ்காணும் ஃபார்வர்டு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து பதிவிடுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டது.

ஏர்டெல், ஐடியா, வோடபோன், பிஎஸ்என்எல், ஜியோ உள்ளிட்ட நெட்வொர்க் சேவைகளுக்கு வழங்கப்பட்ட வழிமுறையை தனித்தனியாக மேற்கொண்டு பார்க்கையில் ” கொரோனா காலர் டியூன் ” நீக்கப்படவில்லை. அதற்கு கிடைத்த பதில்களை உங்களுக்காக இணைத்துள்ளோம்.

சில நெட்வொர்க்கில் இருந்து உங்கள் Pre-RBT Promot நீக்கப்பட்டதாக பதில் வருகிறது. ஆனால், அழைப்பின் போது ” கொரோனா காலர் டியூன் ” மீண்டும் தொடரவேச் செய்கிறது. இதைப் பயன்படுத்தி பார்த்தவர்கள் பலரும் தங்களுக்கு தொடர்ந்து கொரோனா காலர் டியூன் வருவதாகவே நமக்கு தெரிவித்து உள்ளனர்.

Advertisement

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button