மார்ச் 17 முதல் இரவு நேர ஊரடங்கு குஜராத் நகரங்களில் மட்டுமே.. நக்கீரன் தலைப்பால் குழப்பம் !

பரவிய செய்தி
நாளையிலிருந்து (17.03.2021) இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது.
மதிப்பீடு
விளக்கம்
” அதிகரிக்கும் கரோனா: முதல்வர்களோடு ஆலோசிக்கும் பிரதமர் ” எனும் தலைப்பில் நக்கீரனில் வெளியான செய்தியை முகநூலில், ” நாளையிலிருந்து (17.03.2021) இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளத ” எனக் குறிப்பிட்டு பகிர்ந்து உள்ளனர்.
இதைப் பார்த்தவர்கள், கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டு உள்ளதாக நினைத்து வருகின்றனர். இதன் உண்மைத்தன்மை குறித்தும் வாசகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். உண்மையில், முகநூல் பதிவில் வைத்த தலைப்பால் குழப்பம் உருவாகி இருக்கிறது.
செய்தியில், ” குஜராத்தின் அகமதாபாத், வதோதரா, சூரத் மற்றும் ராஜ்கோட்டில் மார்ச் 17 இருந்து மார்ச் 31 வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும் ” கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தவில்லை. குறிப்பிட்ட மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பதால் இரவு நேர ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா மீண்டும் பரவுவது தொடர்பாக மாநில முதல்வர்கள் உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
செய்தியை படிக்க வேண்டும் என்பதற்காக க்ளிக் பைட் வடிவில் முகநூல் பதிவில் இப்படியொரு தலைப்பை வைத்துள்ளனர். இது தவறாக பரவி வருகிறது.