கொரோனாவில் பெற்றோரை இழந்த 2 குழந்தைகளை தத்தெடுக்குமாறு பரவும் ஃபார்வர்டு செய்தி.. பகிர வேண்டாம் !

பரவிய செய்தி

2 வயது பெண் குழந்தை,2 மாத ஆண் குழந்தை.. தாய் மற்றும் தந்தை கோவிட் காரணமாக உயிரிழந்துள்ளனர். தத்தெடுக்க ஆர்வமுள்ள எவரும் தொடர்பு கொள்ளவும் (veni-9949380815) பிராமண குழந்தைகள். இந்த உதவியற்ற குழந்தைகளுக்கு உதவி கிடைக்கும்படி மற்ற குழுக்களுக்கு அதிகபட்சமாக ஃபார்வர்டு செய்யவும்.

Facebook link | Archive link 

 

மதிப்பீடு

விளக்கம்

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றல் தாய், தந்தை இருவரையும் இழந்த குழந்தைகள் குறித்து சமூக வலைதளங்களில், செய்திகளில் வெளியாகும் தகவல்களை பலரும் கண்டு வருகிறோம்.

Advertisement

இந்நிலையில், கொரோனாவில் பெற்றோரை இழந்த 2 வயது பெண் குழந்தை, 2 மாத ஆண் குழந்தையை(பிராமண குழந்தைகள்) தத்தெடுக்க விரும்புவோர் தொடர்பு கொள்ளுமாறு வேனி-9949380815 எனும் தொலைபேசி எண் உடன் ஃபார்வர்டு செய்தி முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்டவையில் பகிரப்பட்டு வருகிறது.

இதேபோல், ” 2வயது பெண் குழந்தையும் 2 மாத ஆண் குழந்தையும் ஆதரவற்று வீடு இல்லாமல் இருக்கிறார்கள். இவர்களது பெற்றோர் இருவரும் கொரோனா தொற்றல் இறந்து விட்டார்கள். அக்குழந்தைகளின் நலன் கருதி யாரேனும் தத்தெடுத்துக் கொள்ள விரும்பினால் 9718798777 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் ” எனக் கூறி அதே ஃபார்வர்டு செய்தி உடன் மற்றொரு எண்ணும் பகிரப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?

குழந்தைகள் குறித்து பகிரப்பட்டு வரும் ஃபார்வர்டு தகவலில் இடம்பெற்ற 2 எண்ணிற்கும் கடந்த சில தினங்களாக தொடர்பு கொண்ட போது அந்த எண் உபயோகத்தில் இல்லை என வருகிறது.

அந்த எண்களை கொண்டு கூகுள், சமூக வலைதளங்களில் தேடுகையில், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் இந்த ஃபார்வர்டு தகவல் வெளியாகி பின்னர் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வைரல் செய்யப்பட்டு இருக்கிறது என்பதை காண முடிந்தது.

Advertisement

ஃபார்வர்டு தகவலில் உள்ள தொலைபேசி எண் True caller செயலியில் தெலுங்கு பெயரில் வருவதாகக் குறிப்பிட்டு ஒருவர் ட்வீட் செய்து இருக்கிறார்.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இவ்விரு தொலைபேசி எண்களும் ஒரே ஃபார்வர்டு தகவலுடன் இந்திய அளவில் பகிரப்பட்டு வருகிறது. எனினும், இவ்விரு எண்களுமே உபயோகத்தில் இல்லை. எனவே, குழந்தைகள் குறித்த இந்த ஃபார்வர்டு தகவலை யாருக்கும் பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button