கொரோனா தடுப்பூசிகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கா ?

பரவிய செய்தி
கொரோனா தடுப்பூசிகளுக்கு ஜிஎஸ்டி-யில் இருந்து விலக்கு. 44வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி !
மதிப்பீடு
விளக்கம்
44வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பின் பேசிய ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கொரோனா தடுப்பூசி மற்றும் கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கான ஆம்போடெரிசின்-பி மருந்துக்கு ஜிஎஸ்டி-யில் இருந்து விலக்கு அளித்து இருப்பதாக தெரிவித்தார் என புதிய தலைமுறை செய்தியில் வெளியாகியது.
ஆனால், கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்பட்டும், கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கான ஆம்போடெரிசின்-பி மருந்துக்கு ஜிஎஸ்டி-யில் இருந்து விலக்கு அளித்து இருந்தாலும், கொரோனா தடுப்பூசிக்கு ஜிஎஸ்டி-யில் இருந்து விலக்கு அளிக்கப்படவில்லை.
” தடுப்பூசிகளுக்கு 5% ஜிஎஸ்டி தொடர்கிறது. முன்பு அறிவித்தப்படி, 75 சதவீத தடுப்பூசிகளை ஒன்றிய அரசு வாங்கும், மேலும் அதன் ஜிஎஸ்டியையும் செலுத்தும். இருப்பினும், ஜிஎஸ்டியில் இருந்து கிடைக்கும் வருமானத்தில் 70% மாநிலங்களுடன் பகிரப்படும் என நிர்மலா சீதாராமன் கூறியதாக ” இந்தியா டுடேவில் வெளியாகி இருக்கிறது.
2021 செப்டம்பர் வரைக்கும் அறிவிக்கப்பட்ட மாற்றத்தில், tocilizumab மற்றும் amphotericin b ஆகிய இரண்டிற்கு மட்டுமே ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருப்பதாக இடம்பெற்று இருக்கிறது.
நியூஸ்18, எகனாமிக் டைம்ஸ் உள்ளிட்ட செய்திகளிலும் தடுப்பூசிக்கான 5% ஜிஎஸ்டி தொடரும் என்றேக் கூறப்பட்டுள்ளது.
முடிவு:
நமது தேடலில், கொரோனா தடுப்பூசிகளுக்கு ஜிஎஸ்டி-யில் இருந்து விலக்கு என வெளியான செய்தி தவறானது. கொரோனா தடுப்பூசிகளுக்கு 5% ஜிஎஸ்டி தொடர்கிறது என அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.