கொரோனா வைரஸ் தொடர்பாக தமிழக அரசின் அவசர உதவி எண்கள் !

பரவிய செய்தி
தமிழ்நாடு அரசின் 24 மணி நேரம் கொரோனா வைரஸ் அவசர உதவி எண் !
மதிப்பீடு
விளக்கம்
உலகையே அச்சுறுத்தி வரும் COVID-19 வைரஸ் (கொரோனா வைரஸ்) இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியா வந்த பயணிகளில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதால் நாடு முழுவதும் மக்கள் பீதி அடைந்துள்ளனர். காய்ச்சல் அறிகுறி தென்பட்டாலே கொரோனா வைரஸ் வந்துவிட்டதாக அதிர்ச்சி அடையும் அளவிற்கு கொரோனா வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் படிக்க : “ரசம்” சாப்பிட்டால் கொரோனா வைரசை தடுக்க முடியுமா ?
தமிழகத்தில் கொரோனா வைரசின் அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட பலருக்கும் கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இப்படி அறிகுறி இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட 1,243 பேரை அவர்களின் இல்லங்களில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.
முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. எனினும், அவர்களில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் உறுதி செய்யப்படவில்லை. 5 பேர் மட்டுமே மருத்துவமனையில் தனி வார்டில் கண்காணிப்பில் உள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில்தான், கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களுக்கு இருக்கும் அணைத்து கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்த மற்றும் அவசர உதவிக்கு பிரத்யேக சேவை எண்களை தமிழக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளது.
மேலும் படிக்க : கொரோனா வைரசிற்கு யுனிசெப் வழங்கிய ஆலோசனை உண்மையா ?
044-2951 0400, 044-2951 0500 ஆகிய தொலைபேசி எண்களுக்கும், 94443 40496 , 87544 48477 ஆகிய செல்போன் எண்களுக்கும் எந்த நேரமும் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். பொதுமக்கள் தங்களுக்கு வைரஸ் அறிகுறி இருப்பதாக சந்தேகம் கொண்டால் அவசர உதவி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். சுகாதார குழு, உங்களுக்கு சோதனை தேவையா, வீட்டில் தனிமைப்படுத்தி இருக்க வேண்டுமா அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டுமா என முடிவு செய்வார்கள்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.