This article is from Mar 23, 2020

கொரோனா வைரசிற்கான தடுப்பு மருந்தா ?| வைரலாகும் புகைப்படம்.

பரவிய செய்தி

கொரோனா வைரசிற்கு எதிரான தடுப்பு மருந்து என இணையத்தில் உலாவும் புகைப்படம்.

மதிப்பீடு

விளக்கம்

உலகளாவிய தொற்றாக பரவி வரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மக்களை குணப்படுத்தவும், வைரசை தடுக்கவும் குறிப்பிட்ட மருந்துகள் பயன்படுத்தி வருவதாக கியூபா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அறிவித்து வருகின்றனர். எனினும், அதிகாரப்பூர்வமாக கொரோனா வைரசிற்கு எதிரான மருந்து என பொதுவான மருந்து ஒன்று இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், நோவல் கொரோனா வைரசிற்கு (COVID-19) எதிரான தடுப்பு மருந்து என மேற்காணும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?

வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், அவை தென் கொரியாவைச் சேர்ந்த நிறுவனங்கள் கொரோனா வைரஸ் தொடர்பாக உருவாக்கி உள்ள டெஸ்ட் கிட் என்பதை அறிய முடிந்தது.

மார்ச் 22-ம் தேதி newtelegraphng என்ற இணையதளத்தில் வெளியான செய்தியில் , ” தென் கொரியாவைச் சேர்ந்த நிறுவனம் கொரோனா வைரஸ் நோய் கண்டறிதல் சோதனைக்கு விரைவான சோதனை கிட்டை தயாரித்து உள்ளதாக ” வைரல் புகைப்படத்துடன் வெளியாகி இருக்கிறது.

Twitter link | archived link 

ஃபிளோரியன் விட்டல்ஸ்கி எனும் பத்திரிகையாளர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ” 10 நிமிடத்தில் கோவிட்-19 நோயறிதல் கிட்டை உருவாக்கும் முயற்சியை கொரியா முடித்துள்ளது. வாரத்திற்கு 3,00,000 கிட்களை ஏற்றுமதி செய்ய அவர்கள் திட்டமிட்டு உள்ளதாக ” கூறப்பட்டுள்ளது.

Youtube link | archived link 

வைரலாகிக் கொண்டிருக்கும் புகைப்படத்தில் இருக்கும் டெஸ்ட் கிட் அட்டையில் ” sugentech ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்நிறுவனம், கொரோனா வைரஸ் டெஸ்ட் கிட்டை எப்படி உபயோகிப்பது என யூடியூபில் வீடியோ ஒன்றினை மார்ச் 5-ம் தேதி பதிவேற்றி உள்ளது. கொரோனா வைரஸ் தொடர்பாக பல்வேறு மருந்துகள் இணையத்தில் உலாவி வருகிறது. தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என தெரிவித்துக் கொள்கிறோம்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader