கோவிட்-19 வைரசை நாஸ்டர்டாமஸ் முன்பே கணித்தாரா ?

பரவிய செய்தி
2020-ல் சீனாவில் இருந்து வைரஸ் பரவுவதை 1555-ல் எழுதிய நாஸ்டர்டாமஸ்.
மதிப்பீடு
விளக்கம்
முன்கணிப்பு என்ற வார்த்தைகளை கடந்த சில மாதங்களாக அதிகம் கேட்டு இருப்பீர்கள். கோவிட்-19(கொரோனா வைரஸ்) உலகளாவிய தொற்றாக உருவெடுத்த பிறகு வைரஸ் பரவுவது குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பே கணித்து இருந்தார்கள், அதற்கான ஆதாரங்கள் என பல தகவல்கள் உலக அளவில் வைரலாகியது.
இந்நிலையில், 1500-களில் வாழ்ந்த நாஸ்டர்டாமஸ் சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவி இத்தாலி நாட்டில் உயிர் பலிகளை வாங்கும் என மறைமுக வார்த்தைகளால் குறிப்பிட்டு இருந்துள்ளார் என ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்த சில வரிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
1500-களில் பிரான்சில் வாழ்ந்த மைக்கல் டி நாஸ்டர்டாமஸ் ஒரு ஜோதிடர் ஆவார். அவரின் புத்தகமான ” லெஸ் ப்ரோஃபீடிஸ் “-க்கு எழுதிய கவிதை சார்ந்த பாடல்களால் இன்று மிகவும் பிரபலமானவராக மாறினார். பல ஆர்வலர்கள் தற்போது நிகழும் பல்வேறு குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வுகளுக்கு முன்னறிவிப்பை நாஸ்டர்டாமஸ் விட்டுச் சென்றுள்ளார் எனக் கூறி வருகின்றனர்.
சிறிய கற்பனையின் உதவியுடன் மற்றும் நிறைய விசயங்களை பொதுவாக எழுதியவர் நாஸ்டர்டாமஸ். 16-ம் நூற்றாண்டில் இருந்து கிட்டத்தப்பட்ட ஒவ்வொரு முக்கிய நிகழ்வுகளையும் அவர் ” முன்கணித்து ” உள்ளார் என குறிப்பிட்ட மக்கள் நம்பி வருகிறார்கள். எனினும், பல நேரங்களில் நாஸ்டர்டாமஸ் தொடர்பான தவறான செய்திகள் பல நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.
அதன் தொடர்ச்சியாக சீனாவில் இருந்து பரவிய கோவிட்-19 வைரஸ் குறித்தும் நாஸ்டர்டாமஸ் கணித்து உள்ளதாக பரப்பி வருகிறார்கள். ஆனால், குறிப்பிட்ட வைரசின் கணிப்பாக நாலடிபாடல் வடிவிலோ அல்லது ” லெஸ் ப்ரோஃபீடிஸ் ” புத்தகத்தில் அதுபோன்ற வார்த்தைகளோ வெளியாகவில்லை. நாஸ்டர்டாமஸ் கணித்ததாக பரப்பப்படுபவை அவரின் பெயரை வைத்து உருவாக்கப்படும் நவீன புரளிகள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க : மோடி பிரதமர் ஆவதை 450 ஆண்டுகளுக்கு முன்பே நாஸ்டர்டாமஸ் கணித்தாரா ?
இதேபோல், 2019 மே மாதம் இந்தியாவில் மோடியின் ஆட்சியே அமையும் என நாஸ்டர்டாமஸ் 450 ஆண்டுகளுக்கு முன்பே முன்கணித்து இருந்ததாக வைரலான செய்தி தவறானது என்பதை விரிவாக கட்டுரை மூலம் தெளிவுப்படுத்தி இருந்தோம்.
மேலும் படிக்க : 1981-ல் வெளியான நாவலில் “வுஹான் 400” என கொரோனா வைரஸ் கணிக்கப்பட்டதா ?
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.