முதல்வரின் வருகைக்காக கோவையில் சாலை தடுப்புச் சுவரில் ஒரு பக்கம் மட்டும் வெள்ளை அடித்ததாக பாஜகவினர் பரப்பும் வதந்தி!

பரவிய செய்தி

மாநகராட்சி பணம் கொடுப்பது இரண்டு புறமும் வெள்ளை அடிக்க, ஆனால், முதல்வர் கண்ணுக்கு தெரியும் பக்கத்தில் மட்டும் அடித்துவிட்டு மறுபுறம் அடிக்காமல் விட்டுவிட்டனர். இது போன்ற அப்பட்டமாக கொள்ளை அடிப்பதால்தான் மக்கள் திமுகவை வெறுக்கிறார்கள் திராவிட சுவர்.

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

தமிழ்நாடு முதலமைச்சர் கோவை, ஈச்சனாரியில் நடைபெற இருந்த அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ராமநாதபுரம் – போத்தனூர் சாலை வழியாகச் செல்ல இருந்தார். இதற்காக சாலையின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பில், முதல்வர் செல்லும் பக்கம் மட்டும் வண்ணம் பூசப்பட்டு பளிச் என்று தோற்றமளிக்கிறது என்றும், அவரது கண் பார்வை படாத தடுப்பின் மறுபக்கத்தில் வண்ணம் பூசப்படவில்லை என பாஜகவைச் சார்ந்த செல்வ குமார் என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். பாஜகவினர் பலரும் இப்புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வைரல் செய்து வருகின்றனர்.

உண்மை என்ன ?

செல்வ குமார் டிவிட்டரில் பகிர்ந்திருந்த புகைப்படத்தில் JK AUTO PARTS என்ற கடை இருப்பது பார்க்க முடிந்தது. அதன் பெயரைக் கூகுள் மேப்யில் தேடியதில் நஞ்சுண்டபுரம் சாலை என்பது தெரிந்தது.

அதே சாலையில் அமைத்துள்ள மற்றொரு சலூன் கடை உரிமையாளரைத் தொடர்பு கொண்டு பேசியதில், சாலை தடுப்பின் இரண்டு பக்கமும் வண்ணம் பூசப்பட்டுள்ளதாகவும், ஒருபுறம் வண்ணம் பூசப்பட்ட பிறகு மற்றொருபுறம் பூசியதாகவும் தெரிவித்தார்.

Twitter link | Archive link 

தடுப்பின் ஒரு பக்கம் மட்டும் வண்ணம் பூசப்பட்டுள்ளதாக ஜூனியர் விகடனில் செய்தி வெளியாகி உள்ளது என்றும், புகைப்படங்கள் பகிரப்பட்டு வருவதைப் பற்றியும் அப்பகுதியினரிடம் கேட்கப்பட்ட போது, அந்த தடுப்பில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக வண்ணம் பூசும் வேலை நடைபெற்றதாகவும், ஒருபுறம் வேலை முடிந்த பிறகு மறுபுறம் வண்ணம் அடித்ததாகவும் தெரிவித்தனர். மேலும், அப்புகைப்படங்களை யூடர்னுக்கு பகிரவும் செய்துள்ளார்.

முடிவு :

நம் தேடலில், முதலமைச்சர் செல்லும் சாலையில் அமைந்துள்ள தடுப்பின் ஒரு பக்கம் மட்டுமே வெள்ளை அடித்துவிட்டு மறுபுறம் வெள்ளை அடிக்காமல் விட்டு விட்டதாக பாஜகவினர் பரப்பும் தகவல் தவறானது, இரண்டு பக்கமும் வெள்ளை அடிக்கப்பட்டு உள்ளது என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader