This article is from Jul 04, 2020

கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படும் புகைப்படமா ?| பாரத் பயோடெக் மறுப்பு.

பரவிய செய்தி

கோவாக்ஸின் இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி பரிசோதனை. நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்  டாக்டர் ஸ்ரீநிவாஸ் சார. பாரத் பயோடெக் துணை தலைவர். நல்லதே நடக்க பிரார்த்திப்போம்.

Facebook link | archive link 

மதிப்பீடு

விளக்கம்

இந்தியாவின் ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் எனும் நிறுவனம் கோவிட்-19 தொற்றுக்கு கண்டுபிடித்த கோவாக்சின் எனும் தடுப்பூசியை விலங்குகளுக்கு செலுத்தியதில் பயனளிப்பதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, கோவாக்சின் மருந்தை ஜூலை மாதம் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதித்து பார்க்க ஐசிஎம்ஆர் தெரிவித்து இருந்தது.

Website link | archive link 

இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் துணைத்தலைவர் ஸ்ரீனிவாசன் முதல் கோவாக்சின் மருந்தை செலுத்திக் கொண்டதாக மேற்காணும் புகைப்படம் இந்திய அளவில் வைரலாகி வருகிறது.

உண்மை என்ன ? 

மேற்காணும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில் பரவி வரும் பதிவுகள் மட்டுமே கிடைத்த நிலையில் ஊடக செய்திகளை ஆராய்ந்த போது ஜூலை 1-ம் தேதி NDTV செய்திக்கு பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா எல்லா, இன்னும் 10 நாட்களில் மனிதர்களுக்கான சோதனை தொடங்கும் எனத் தெரிவித்து உள்ளதாக வெளியாகி இருக்கிறது.

Twitter link | archive link

இதையடுத்து, பாரத் பயோடெக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் கிடைக்கிறதா எனத் தேடுகையில் அந்நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் ஜூலை 3-ம் தேதி வைரலாகும் புகைப்படம் குறித்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Twitter link | archive link 

” வாட்ஸ்அப் மற்றும் பிற சமூக ஊடகங்களில் பரப்பப்படும் சில படங்கள் மற்றும் செய்திகள் பாரத் பயோடெக் மூலம் வெளியானவை அல்ல. பரவி வரும் புகைப்படமானது அனைத்து உற்பத்தி ஊழியர்களுக்ளையும் பரிசோதிக்கும் ஒரு வழக்கமான இரத்த ஓட்ட நடைமுறையாகும் ” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முடிவு : 

நம் தேடலில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் துணைத் தலைவர் முதல் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார் எனப் பரவும் புகைப்படம் தவறானது என்றும், அந்த செய்தியை மறுத்தும் அந்நிறுவனம் ட்வீட் செய்து உள்ளதை அறிந்து கொள்ள முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader