கர்நாடகாவில் பசு மாட்டைக் கொல்வதாகப் பரப்பப்படும் மணிப்பூரின் பழைய வீடியோ !

பரவிய செய்தி
கர்நாடகாவில் பாஜகவை மிரட்டும் பாக்கிஸ்தான் நாய்கள்….. பசுமாட்டை கொன்று மதவெறியை தனித்து கொள்கின்றனர். இந்துவே உன் நிலையை நினைத்துப்பார்..Twitter Link | Archive Link
மதிப்பீடு
விளக்கம்
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை அடுத்து, அங்கு காங்கிரஸ் வெற்றிக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து கூறினார் என்றும், கர்நாடகாவில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டுள்ளது என்றும் பல்வேறு வதந்திகள் தொடர்ச்சியாகப் பரப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தற்போது கர்நாடகாவில் பாஜகவினரை மிரட்டி பசுமாட்டைக் கொல்வதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பாஜகவினரால் பரவலாகப் பரப்பப்படுகிறது.
*கர்நாடகாவில் பாஜகவை மிரட்டும் பாக்கிஸ்தான் நாய்கள்…..* *பசுமாட்டை கொன்று மதவெறியை தனித்து கொள்கின்றனர்.* *இந்துவே உன் நிலையை நினைத்துப்பார்*👇👇 pic.twitter.com/z9pVEEpLHe
— அகண்ட பாரதம் 🇮🇳🕉️🚩 (@NaMo_Bharathan) May 17, 2023
The Khan-Grace victory in Karnataka is celebrated by slaughtering a cow on the BJP flag. Real Indians!! A cow pays the price for hatred!!! pic.twitter.com/cVgFvLyCmc
— Sandy 🇮🇳(Sundeep) (@ssingapuri) May 18, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களைக் கொண்டு கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ ஜனவரி 31, 2022 அன்று Nishant Azad/निशांत आज़ाद என்வரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.
அதில் “மணிப்பூரில் முஸ்லீம்கள் பாஜக கொடியின் மீது பசுவை வைத்து கொல்லுகின்றனர். இந்த குண்டர்கள் முதலமைச்சரையும் அசிங்கப்படுத்தினர். மோஹ்தர்மா கூறுகிறார்: இந்தியாவில் முஸ்லீம்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர். அவர்கள் மத்தியில் அமைதியின்மை மற்றும் பாதுகாப்பின்மை உணர்வு இருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
#Manipur: Muzlims slaughtered a #cow keeping on #BJP flag. The goons also abused Chief Minister @NBirenSingh and @BJP4Manipur president A Sarda Devi.
And this Mohtarma @khanumarfa
says that Muslims live in fear in India and there is a feeling of unease and insecurity among them pic.twitter.com/txsB4Kq0Dt— Nishant Azad/निशांत आज़ाद🇮🇳 (@azad_nishant) January 31, 2022
இதனையடுத்து மணிப்பூர் முதல்வரான என்.பிரேன் சிங் , Nishant Azad/निशांत आज़ाद -இன் ட்வீட்டுக்கு பதிலளித்து, Imphal Free Press வெளியிட்டுள்ள செய்தியைப் பதிவிட்டு பசுவைக் கொன்ற மூவரும் கைது செய்யப்பட்டனர் என்று பதிவிட்டிருந்தார்.
2022 பிப்ரவரி 01 அன்று வெளியிடப்பட்டுள்ள அந்த கட்டுரையில் மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்களை அறிவித்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நஸ்புல் ஹுசைன், அப்துர் ரஷீத் மற்றும் எம்டி ஆரிப் கான் ஆகியோர், தரையில் பாஜக கொடியை விரித்து அதன் மீது பசுவை அறுப்பது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளனர். மேலும் அவர்கள் ஷிலாங் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் 1960 இன் விதிகளின் கீழ் மற்றும் பல்வேறு மத குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்ததற்காக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக 2022 பிப்ரவரி 02 அன்று டைம்ஸ் ஆப் இந்தியா கட்டுரை வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க: கர்நாடகாவில் பாஜக 41 இடங்களில் வெறும் 1000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததாகப் பரப்பப்படும் பொய் !
மேலும் படிக்க: கர்நாடகாவில் காங்கிரசின் முஸ்லீம் வேட்பாளருக்கு போலி வாக்கு செலுத்தி வென்றதாகப் பரப்பப்படும் வதந்தி !
இதற்கு முன்பும் கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின்பு அங்கு பரப்பப்பட்டு வரும் பொய் செய்திகள் குறித்து யூடர்ன் பக்கத்தில் பல கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதால் பாகிஸ்தான் கொடியை ஏற்றியதாகப் பரப்பப்படும் வதந்தி !
முடிவு:
நம்தேடலில், கர்நாடகாவில் பாஜக கொடியில் வைத்து பசு மாட்டைக் கொல்வதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ 2022-இல் சர்ச்சையை கிளப்பிய மணிப்பூரின் பழைய வீடியோ என்பதை அறிய முடிகிறது.