கோமியத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட கேன்சர் மருந்துக்கு அமெரிக்க காப்புரிமையா ?

பரவிய செய்தி

பசுவின் கோமியத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட அன்டி-கேன்சர், அன்டி-பயோடிக் , அன்டி-இன்ஃபேக்சன் மருந்துகளுக்கு US காப்புரிமை. இந்தியாவில் உள்ளவர்கள் பசுவை கேலியாக பார்க்கும் பொழுது அமெரிக்க பல்கலைக்கழகங்கள் மற்றும் எம்என்சி-ஸ் பசுவின் கோமியத்தில் இருந்து உருவாக்கப்பட்ட தயாரிப்புகளுக்கு 6 காப்புரிமைகளை பெற்றுள்ளனர்.

மதிப்பீடு

விளக்கம்

இந்தியாவில் பசுவினை புனிதமாக கருதுவது மட்டுமல்லாமல் பசுவின் கோமியமானது(சிறுநீர்) பல நோய்களை குணப்படுத்தக் கூடிய தன்மை கொண்டது, குறிப்பாக புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் கோமியத்திற்கு இருப்பதாக இந்திய அளவில் விவாதங்கள் தொடர்கிறது.

இந்நிலையில், பசுவின் கோமியத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட அன்டி-கேன்சர், அன்டி-பயோடிக் , அன்டி-இன்ஃபேக்சன் மருந்துகளுக்கு US காப்புரிமை பெறப்பட்டு உள்ளதாகவும், பசுவின் கோமியத்தில் இருந்து தயாரிக்கப்பட்டவைக்கு அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் பெரு நிறுவனங்கள் 6 காப்புரிமைகளை பெற்று இருப்பதாகவும் காப்புரிமை ஆவணங்கள் இணைக்கப்பட்ட மீம் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

இதில், காப்புரிமை ஆவணத்தின் புகைப்படம் மற்றும் அதன் கீழ் குறிப்பிடப்பட்ட வாசகத்தின் நம்பகத்தன்மையை ஆராய்ந்து பார்த்தோம். அதில், இரு காப்புரிமை ஆவணங்கள் (6,896,907 மற்றும் 6,410,059) இணைக்கப்பட்டு உள்ளன.

  1. US patent No 6410059- for Antibiotic Anti Fungal, Bio enhancer effect of Gomutra
  2. US Patent No. 6896907 – For Anti Allergic, Anti infective, Nutrient & Anti-cancer

அவ்விரண்டும் உண்மையான காப்புரிமை ஆவணங்களே. இவைகள் மட்டும் அல்ல, மேலும் மூன்று காப்புரிமை ஆவணங்கள் ஐக்கிய அமெரிக்கா மூலம் வழங்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் நோக்கம் பசுவின் தயாரிப்புகளில் இருந்து மனிதர்கள், விவசாயம், சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் தீர்வுகளை கண்டறிவதாகும். இதற்காக, இந்தியாவின் Council of Scientific and Industrial research(CSIR) ஆனது Govigyan Anusandhan Kendra உடன் இணைந்து மேற்கொள்ளும் ஆராய்ச்சிக்கு ஐக்கிய அமெரிக்கா 5 காப்புரிமைகளை வழங்கி உள்ளது.

Advertisement

2002-ல் ஹிந்து பத்திரிக்கையில் ” U.S Patent for indian innovation ” என்ற தலைப்பில் வெளியான செய்தியில், இந்திய ஆராய்ச்சிக்கு ஐக்கிய அமெரிக்காவின் காப்புரிமை மற்றும் வர்த்தக அலுவலகம் காப்புரிமை வழங்கி உள்ளதாகவும், Govigyan Anusandhan Kendra உடன் இணைந்து சிஎஸ்ஐஆர் ஆராய்ச்சி மேற்கொள்வது குறித்தும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

சிஎஸ்ஐஆர் மற்றும் Govigyan Anusandhan Kendra மேற்கொள்ளும் ஆராய்ச்சிக்கு அமெரிக்காவில் 5 காப்புரிமைகள் மற்றும் சீனாவில் 1 காப்புரிமையை வைத்து இருக்கிறார்கள்.

” பசுவின் கோமியத்தில் அன்டி-கேன்சர், அன்டி-பயோடிக் , அன்டி-இன்ஃபேக்சன் குணங்கள் இருப்பதை ஐக்கிய அமெரிக்காவின் காப்புரிமை அலுவலகம் ஏற்றுக் கொண்டு அதற்கான காப்புரிமையை வழங்கவில்லை. இந்திய ஆராய்ச்சிக்கான சிஎஸ்ஐஆர் உடைய உரிமையை அங்கீகரிக்க மட்டுமே செய்து உள்ளது. அதற்கான காப்புரிமையே இவை. ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும் பொழுது அதனை பதிவு செய்து காப்புரிமை பெறுவார்கள். அவ்வாறே இங்கும் நிகழ்ந்து உள்ளது ”

அமெரிக்க காப்புரிமை மற்றும் வர்த்தக அலுவலகம் வழங்கிய காப்புரிமையை தவறாக புரிந்து கொண்டது மட்டுமல்லாமல், அவை அமெரிக்க பல்கலைக்கழகங்கள் மற்றும் பெரு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட காப்புரிமை என தவறான செய்தியை பதிவிட்டு வருகிறார்கள்.

முடிவு :

1. பசுவின் கோமியத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளுக்கு அமெரிக்க பல்கலைக்கழங்கள் மற்றும் பெரு நிறுவனங்கள் 6 காப்புரிமை பெற்றதாக கூறியது தவறான தகவல்.

2. கோமியத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளை ஏற்று வழங்கப்பட்ட காப்புரிமை ஆவணங்கள் எனக் கூறுவதும் தவறு. அவை ஆராய்ச்சி உரிமைக்கான காப்புரிமை.

பசுவின் கோமியத்தில் இருந்து மருந்துங்கள் தயாரித்து புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை குணப்படுத்த முடியும் என்ற விவாதங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன, இது போன்ற சூழலில் தவறான தகவலை பரப்பி வருவதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம் / Proof Links

Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close