This article is from Jan 07, 2022

சிஆர்பிஎஃப் வீரர்களின் மாற்றம் எனப் பரவும் இருவேறு பிரிவுகளின் புகைப்படங்கள் !

பரவிய செய்தி

இரும்பாக உறுதியாக வலிமையாக மாற்றப்பட்டுள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் போர்ஸ் அதிரடி மிரட்டல்!

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

2012-ல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் நிலை 2022-ல் மோடி ஆட்சியில் இப்படி மாறியுள்ளதாக இரு புகைப்படங்கள் ஒப்பிடப்பட்டு இந்திய அளவில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?  

வைரல் செய்யப்படும் புகைப்படங்களில் முதலில் உள்ளதை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” 2012 ஜூன் 27-ம் தேதி காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகரில் ஊரடங்கின் போது முஸ்லீம் பெண்களை சிஆர்பிஎஃப் பிரிவைச் சேர்ந்தவர் விசாரிப்பதாக alamy stock இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.

அடுத்ததாக உள்ள புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” 2021 ஜனவரி 22-ம் தேதியன்று டெல்லியில் உள்ள ராஷ்ட்ரிய ரங்ஷாலா முகாமில் குடியரசு தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற பயிற்சியின் போது சிஆர்பிஎஃப் கமாண்டோ எச்சரிக்கையுடன் இருப்பதாக 2021 ஜனவரி 23-ம் தேதி Getty Images இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.

இப்படத்தில் இருக்கும் வீரர் CRPF Valley QAT (விரைவு நடவடிக்கைக் குழு) உறுப்பினர். இக்குழு ஜம்மு மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் செயல்படும் மற்றும் சிறப்புப் பணிகளுக்காகப் பணியாற்றும் சிஆர்பிஎஃப் உடைய உயரடுக்கு கமாண்டோ பிரிவு.

2021 டிசம்பர் 23-ம் தேதி நடைபெற்ற சிஆர்பிஎஃப் உடைய பாசிங் அவுட் அணிவகுப்பில்(POP) சிஆர்பிஎஃப் வீரர்கள் காக்கி நிற சீருடையை தற்போதும் பயன்படுத்துவதை பார்க்கலாம். மேலும், வெவ்வேறு அணிகளின் சீருடைகளில் வீரர்கள் இருப்பதை காணலாம்.

முடிவு : 

நம் தேடலில், தற்போதும் சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு காக்கி நிற சீருடை பயன்படுத்தப்பட்டு வருகிறது. வைரல் செய்யப்படும் புகைப்படங்கள் சிஆர்பிஎஃப் உடைய இருவேறு பிரிவைச் சேர்ந்தது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் செயல்படும் CRPF Valley QAT கமாண்டோ வீரரின் புகைப்படத்தை வைத்து தவறான ஒப்பீடு கூற்று பரப்பப்பட்டு வருகிறது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader