மதம் மாற ஒப்புக்கொள்ளும் வரை கையை நசுக்கும் கருவியா ?

பரவிய செய்தி

மதம் மாறுவதற்கு ஒப்புக்கொள்ளும் வரை கையை நசுக்கும் கருவி. ஆங்கிலேய கத்தோலிக்க கிறிஸ்தவத்திற்கு நம் முன்னோரை மதம் மாற்ற செய்த சித்திரவதை.

மதிப்பீடு

சுருக்கம்

15-ம் நூற்றாண்டில் தவறிழைக்கும் மக்களுக்கு சித்திரவதை தண்டனைகளை அளிக்க பயன்படுத்தப்பட்ட சாதனங்களில் இதுவும் ஒன்று. ஆனால், இது இந்தியாவை சேர்ந்தது இல்லை.

விளக்கம்

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு உலக அளவில் பிரிந்து இருந்த மன்னர் ஆட்சிப் பகுதிகளில் தவறு செய்யும் மக்களுக்கு அளிக்கப்படும் தண்டனைகள் கொடூரமாக இருந்ததை படித்து இருப்பீர்கள். அப்படி சித்தரவதை செய்ய மற்றும் தண்டனை வழங்க பயன்படுத்திய 250-க்கும் மேற்பட்ட பொருட்கள் பாரிசில் உள்ள Hotel Salomon de Rothschild எனும் இடத்தில் 2012 ஆம் ஆண்டில் காட்சிப்படுத்தப்பட்டன.

Advertisement

இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்ட 250 பொருட்களில் தற்பொழுது மீம்களில் பரவி வரும் கையை நசுக்கும் சாதனமும் இருப்பதை காண முடிந்தது. இந்த கருவியை இந்தியாவில் மத மாற்றத்திற்காக பயன்படுத்தியதாக பரப்பி வருகின்றனர்.

15 ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்க தேவாலயத்தின் உறுப்பினர்கள் மூலம் கைகளை நசுக்கி சித்திரவதை செய்யும் இத்தகைய கருவி பயன்படுத்தப்பட்டு உள்ளது. காரணம், பேராசை கொண்டு தவறிழைக்கும் கைகளுக்கு தண்டனை வழங்க பயன்படுத்தி உள்ளனர்.

கத்தோலிக்க தேவாலயங்களில் சித்திரவதையான தண்டனையை வழங்க கூடங்கள் அமைக்கப்பட்டு இருக்கும். அன்றைய காலத்தில் ஆட்சியாளர்கள் உத்தரவில் சித்திரவதை அளிக்கும் தண்டனைகள் ஏராளமாக வழங்கப்பட்டு வந்தன. பின் காலங்கள் செல்ல செல்ல அத்தகைய தண்டனைகள் காணாமல் போகின.

ஐக்கிய அமெரிக்கா, பிரான்ஸ், ஐரோப்பிய நாடுகளில் பழங்காலத்தில் சித்திரவதை செய்ய ஏராளமான கருவிகளை அதிகம் பயன்படுத்தினர். அவ்வாறு பயன்படுத்தப்பட்ட கருவிகள் சேகரிக்கப்பட்டு ஏலத்தில் விடப்படுகின்றன.

Advertisement

படத்தில் காண்பிக்கப்பட்ட கருவி சித்திரவதை செய்ய பயன்படுத்தும் கருவி என்றாலும், இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சியில் மத மாற்றம் செய்ய பயன்படுத்திய கருவிகள் என்பது முற்றிலும் தவறான செய்தியாகும்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button