புல்வாமா தியாகிகளுக்கு முதல் போட்டி வருமானத்தை அளிக்கும் CSK !

பரவிய செய்தி
புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்திற்கு முதல் போட்டிக்கான வருமானத்தை அளிக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.
மதிப்பீடு
விளக்கம்
2019 ஆண்டிற்க்கான ஐ.பி.எல் போட்டிகள் நாளை தொடங்க உள்ள நிலையில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ் அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில், மார்ச் 23-ம் தேதி சென்னை எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் CSK vs RCB போட்டியின் டிக்கெட் வருமானம் முழுவதும் காஷ்மீர் புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்குவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அறிவித்துள்ளது.
” சென்னையின் முதல் போட்டியில் கிடைக்கும் வருவாயை உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு அளிக்கப்படும். அதற்கான காசோலையை அணியின் கேப்டன் எம்.எஸ் தோனி வழங்குவார் ” என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இயக்குனர் ராகேஷ் சிங் அணியின் ட்விட்டரில் பதிவிட்டார்.
இரண்டு வருட தடைக்கு பிறகு மீண்டும் போட்டிக்கு வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் 2018 ஐ.பி.எல் போட்டியின் கோப்பையை வென்றது. சென்ற முறை தமிழகத்தில் ஐ.பி.எல் போட்டிகளுக்கு எதிரான நிலை இருந்ததால் போட்டிகள் வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட்டன.
ஆகையால், சென்னை அணி சொந்த மண்ணில் ஆடுவதை பார்க்க இளைஞர்கள் ஆர்வமாய் உள்ளதை வெளிப்படுத்தி வருகின்றனர்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.