CSK அணிக்காக குஜராத்தில் கூடிய லட்சக்கணக்கான ரசிகர்கள் எனப் பரவும் தவறான புகைப்படங்கள் !

பரவிய செய்தி

இது சேப்பாக்கம் இல்ல, நரேந்திர மோடி ஸ்டேடியம் – CSK vs GT போட்டிக்காக திரண்ட லட்சக்கணக்கான சிஎஸ்கே ரசிகர்கள்!Facebook link 

மதிப்பீடு

விளக்கம்

ஐ.பி.எல் தொடரின் 16வது சீசன் இறுதிப் போட்டி நேற்றைய தினம் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையில் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருந்தது. கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்க்கப்பட்ட இப்போட்டி மழையின் காரணமாக இன்றைக்கு (மே, 29ம் தேதி) ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Archive link  

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆதரவாக மஞ்சள் நிற உடை அணிந்து லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர் என இரண்டு புகைப்படங்களுடன் ‘Asianet News Tamil’ செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளது.

உண்மை என்ன ? 

ஏசியா நெட் வெளியிட்ட செய்தியில் உள்ள புகைப்படங்களைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் இணையத்தில் தேடினோம். முதலில் உள்ள புகைப்படம் 2017 நவம்பர் மாதம் 26ம் தேதி ‘AbiyMustGo’ என்னும் டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. வலது ஓரத்தில் உள்ள கண்டைனர்களை கொண்டு இரண்டும் ஒரே படம் என்பதை அறிய முடிகிறது. அதில், ‘தி கிரேட் எத்தியோப்பியன் ரன் – 2017’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Archive link  

மேற்கொண்டு அப்புகைப்படம் குறித்துத் தேடியதில், ‘mdgfund’ இணையதளத்திலும் அதே புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளதை காண முடிந்தது. அதில், “2015 ஆம் ஆண்டிற்குள் நாம் வறுமையை ஒழிக்க முடியும் “என்ற முழக்கத்தின் கீழ் எத்தியோப்பியன் ஓட்டத்தை ஹெய்ல் கெப்ர்செலாஸி துவங்கினார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றிலிருந்து இந்த புகைப்படம் இந்தியா அல்ல என்பதை அறிய முடிகிறது.

இதனை தொடர்ந்து இரண்டாவதாக உள்ள புகைப்படம் குறித்து இணையத்தில் தேடினோம். EFE Deportes’ (EFE Sports) என்னும் டிவிட்டர் பக்கத்தில் அப்புகைப்படம் 2023ம் ஆண்டு மே மாதம் 27ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. EFE Sports பதிவில் அந்த கூட்டம் ‘UD Las Palmas’ என்னும் கால்பந்தாட்ட அணியை வரவேற்க கிரான் கனாரியா என்ற மைதானத்தின் வெளியே கூடியது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Archive link  

இவற்றிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆதரவாக நரேந்திர மோடி மைதானத்தில் திரண்ட ரசிகர்கள் என ஏசியா நெட் வெளியிட்ட செய்தியில் உள்ள புகைப்படங்கள் வெவ்வேறு நிகழ்வுகளுக்காக வெவ்வேறு நாடுகளில் கூடிய கூட்டம் என்பதை அறியலாம்.  

முடிவு : 

நம் தேடலில், சி.எஸ்.கே. அணிக்காகக் கூடிய கூட்டம் என ஏசியா நெட் நியூஸ் வெளியிட்ட செய்தியில் உள்ள புகைப்படங்கள் வெவ்வேறு நிகழ்வுகளுக்காக வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவை என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader