டாஸ்மாக் நிறுவனத்தின் இணையதளத்தில் திமுக அலுவலகம் என இருக்கிறதா ?

பரவிய செய்தி

டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகங்கள் திமுக அலுவலகங்களாக எப்போ மாற்றப்பட்டது முதலமைச்சரே !

Twitter link | Archive link

மதிப்பீடு

விளக்கம்

தமிழ்நாடு ஸ்டேட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் லிமிடெட் (டாஸ்மாக்) இணையதளத்தில் மாவட்ட மேலாளர்கள் அலுவலகங்கள் பட்டியலில் ‘திமுக அலுவலகம்’ என இருப்பதாக ஸ்கிரீன் ஷார்ட் ஒன்றை பாஜக தகவல் தொழில் நுட்ப மாநில தலைவர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Archive link

அதில், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகங்கள் எப்போது திமுக அலுவலகங்களாக மாற்றப்பட்டது எனத் தமிழ்நாடு முதலமைச்சரை டக் செய்து பதிவிட்டுள்ளார். இதனை பாஜக மற்றும் அதிமுகவைச் சேர்ந்த பலரும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

Archive link

உண்மை என்ன ? 

சி.டி.ஆர்.நிர்மல் குமார் டிவீட் செய்துள்ள ஸ்கிரீன் ஷார்ட் பற்றி டாஸ்மாக் இணையத்தில் தேடிய போது, அந்த இணையதளம் முழுவதும் ஆங்கிலத்தில் இருப்பதைக் காண முடிந்தது.  தமிழ்நாடு அரசின் மற்ற இணையதளங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டிலும் பயன்படுத்தக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால், டாஸ்மாக் இணையதளம் அப்படி இல்லை. 

இதற்கு மாற்றாக, கூகுள் டிரான்ஸ்லேட் மூலம் இணையதளத்தின் மொழியினை மாற்றிப் பயன்படுத்தக் கூடிய வசதி கொண்டு வழிவகை செய்துள்ளனர். 

டாஸ்மாக் இணையதளம் ஆங்கிலத்தில்

ஆங்கிலத்தில் உள்ள டாஸ்மாக் இணையதளத்தில் DISTRICT MANAGERS OFFICES’ என்ற பட்டியலில் ‘DM Office’ என்றே இருக்கிறது. அதனைத் தமிழில் மொழி பெயர்த்துப் படிக்க முயற்சி செய்யும் போது, District Managers Offices என்பது ‘மாவட்ட மேலாளர்கள் அலுவலகங்கள்’ என்றும் DM Office என்பது ‘திமுக அலுவலகம்’ என்றும் மாறுவதைக் காண முடிகிறது. 

டாஸ்மாக் இணையதளம் தமிழ் மொழி பெயர்ப்பில்

அவ்வாறு மொழி பெயர்த்துப் படிக்கும் போது இணையதளத்தின் மேல் பக்கம் Show original எனக் காண்பிக்கிறது. நிர்மல் குமார் பதிவிட்ட புகைப்படத்திலும் Show original என இருப்பதைக் காண முடிகிறது.

மேலும், கூகுள் ட்ரான்ஸ்லேடில் DM Office எனத் தனியாகத் தேடினாலும்  ‘திமுக அலுவலகம்’ என்றே தமிழில் மொழி பெயர்க்கிறது. மேலும், ‘DM’ என்றால் ‘திமுக’ என்றும், ‘ADM Office’ என்றால் ‘அதிமுக அலுவலகம்’ என்றும் மொழி பெயர்க்கிறது. 

இதிலிருந்து, இது ஒரு மொழி பெயர்ப்பினால் ஏற்பட்ட தொழில்நுட்ப பிழை என்பதை அறிய முடிகிறது. இந்த தொழில்நுட்ப பிழைக்கும், திமுகவிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. 

முடிவு : 

நம் தேடலில், டாஸ்மாக் இணையதளத்தில் திமுக அலுவலகம் என இருப்பதாக சி.டி.ஆர்.நிர்மல் குமார் பதிவிட்டது ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கும் போது ஏற்பட்ட தொழில்நுட்ப பிழை என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader