தயிர் சாதம் சாப்பிட்டால் மூளைக்கு நல்லதா ? தயிரில் மட்டுமே டிரிப்டோபன் வேதிப்பொருள் கிடைக்கிறதா ?

பரவிய செய்தி

மூளையில் டிரிப்டோபன் என்ற வேதிப்பொருளை வெளியிடக்கூடிய ஒரே இந்திய உணவு “தயிர் சாதம் ” மட்டுமே. டிரிப்டோபன் காரணமாக உங்கள் நியூரான்கள் ரீசார்ஜ் செய்கின்றன, இது மூளையை அமைதிப்படுத்துகிறது மற்றும் சாந்தமான சிந்தனையை அளிக்கிறது.

மதிப்பீடு

விளக்கம்

செரோடோனின்(serotonin) என்பது நரம்பு செல்களுக்கு இடையில் நடக்கும் தகவல் பரிமாற்றங்களை ஊக்குவிக்கும் வேதிப்பொருள். செரோடோனின் குறைபாடு ஆனது கவலை, கோபம் மற்றும் மனச்சோர்வு போன்ற மனநிலை கோளாறுகளுக்கு வழிவகுக்கும். செரோடோனின் அத்தியாவசிய அமினோ அமிலம் “ டிரிப்டோபன் “. அதேபோல், தூக்க முறைகளை ஒழுங்குபடுத்த உதவும் மெலடோனின் உற்பத்தியிலும் டிரிப்டோபன் பயன்படுத்தப்படுகிறது. இதை மனித உடலால் நேரடியாக உற்பத்தி செய்ய முடியாது, உணவு மூலமே எடுத்துக் கொள்ள முடியும்.

டிரிப்டோபன் ஆனது மூளையை அமைதிப்படுத்த மற்றும் சாந்தமான சிந்தனையை அளிக்க உதவுகிறது என்கிற கூற்று உண்மைதான். ஆனால், தயிர் சாதம் மட்டுமே டிரிப்டோபன் வேதிப்பொருளை வெளியிடுகிறது என்கிற தகவல் தவறானது.

2009-ல் ncbi.nlm.nih.gov இணையதளத்தில் டிரிப்டோபன் குறித்தான கட்டுரையில், டிரிப்டோபன் கிடைக்கக்கூடிய உணவுகளின் பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. பால், சீஸ், கோழி, நட்ஸ், வாழைப்பழம், வேர்கடலை, ஓட்ஸ் போன்ற பல உணவுகள் மூலம் டிரிப்டோபன் கிடைக்கின்றன.

தயிர் சாதம் விசயத்தில், ” டிரிப்டோபன் கொண்ட உணவுகளை கார்போஹைட்ரேட்(சாதம்) உடன் எடுத்துக் கொள்ளும் போது, அது செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது. தயிரில் டிரிப்டோபன் மற்றும் அரிசியில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது. கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் உடலில் இன்சுலின் உற்பத்தியை உருவாக்குகின்றன. இது இரத்த ஓட்டத்தில் இருந்து போட்டியிடும் அமினோ அமிலங்களை அழிக்கிறது, இதனால் மூளை டிரிப்டோபனை எடுத்துக் கொள்ள முடியும் ” திகுயின்ட் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

முடிவு : 

நம் தேடலில், டிரிப்டோபன் எனும் வேதிப்பொருள் மூளையை அமைதிப்படுத்துகிறது, சாந்தமான சிந்தனையை அளிக்கிறது மற்றும் தயிர் மூலம் டிரிப்டோபன் வேதிப்பொருள் வெளியிடப்படுகிறது என்கிற தகவல் உண்மையே.

ஆனால், தயிர் சாதம் மட்டுமே டிரிப்டோபன் கிடைக்கக்கூடிய ஒரே உணவுப் பொருள் எனும் கூற்று தவறானது. பால் சார்ந்த பொருளான தயிர் மட்டுமின்றி பாலாடைக்கட்டி, கோழி, நட்ஸ் போன்ற டிரிப்டோபன் கிடைக்கக்கூடிய பிற உணவுகளும் உள்ளன என அறிய முடிகிறது.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader